உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

71

காரணமும் நன்றாகத் தெரிகிறது. போலீஸ் லைனுக்குப் பக்கத்தில் பள்ளிவாசல் கட்டக்கூடாது என்று அந்தப் பகுதியில் இருந்த சிலர் விரும்பிய காரணம் தவிர வேறு காரணம் எதுவும் நிச்சயமாக இருக்கமுடியாது.

தங்களுடைய கெ காள்கைளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்காக, தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக, குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சியை இந்துக்களுக்காக ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தால் இந்த பிரச்சினை மவுண்ட் ரோடில் ஏற்பட்டால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? இதே போன்று கிறிஸ்தவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு, ஜெமினிக்குப் பக்கத்திலே பூமி வெடித்தது, 'இந்து' ஆபீசுக்குப் பக்கத்திலே பூமி வெடித்தது, 'ஆனந்தவிகடன்' ஆபீசுக்கு எதிரே பூமி வெடித்தது. 'கல்கி' ஆபீசுக்கு முன்னாலே பூமி வெடித்தது ஒரு சிலுவை வந்தது, இந்த இடத்தில் இயேசு நாதருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும். ஒரு மாதா கோயில் கட்டவேண்டும். சிலுவை வெடித்ததால் கிறிஸ்தவர்கள் எல்லாம் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டு அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுவது என்றால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஆகவே, உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நீங்கள் இழுக்காதீர்கள் என்றுதான் கேட்டுக்கொள்ளுகிறேன்.

நாங்கள் கடவுளை நம்பவில்லை, கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திரு. வினாயகம் அவர்கள் சொன்னார்கள். இதிலே மிக முக்கியமான பிரச்சினையைக் கவனிக்க வேண்டும். கடவுளை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோமா அல்லது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளுகிறாரா என்பதுதான் கேள்வி. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அந்தக் காரியங்களைச் செய்து வருகிறோம். நீங்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள். கடவுளைச் சாதாரணமாக ஆக்கி ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று கூறுகிறீர்கள். கடவுளை உங்கள் பொறுப்பில் வைத்திருக்கிறீர்கள். நாங்கள் கடவுளை மிக உயர்ந்த