உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

75

அந்த ஹெட் கான்ஸ்டபிள் விஸ்வனாத ஐயரிடம் பவ்யமாகச் சொல்லியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் விஸ்வனாதனுக்காக அதை ஒப்புக்கொண்டதாக 20-ம் தேதி சொல்லியிருக்கிறார் கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில்! ஆனால் 22-ம் தேதி ஐ.ஜி.-க்கு அனுப்பிய கடிதத்தில், நானும் சில கான்ஸ்டபிள்களும் மேல் நாட்டு மதுபானங்கள் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஒரு கேஸ் போட்டது இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை என்றும், அதனால் இன்ஸ்பெக்டருக்கு தன்மேல் கோபம் ஏற்பட் டிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட விசுவ நாதன் சொன்னார் என்பதற்காக, உங்களுக்காக எதை வேண்டு மானலும் செய்கிறேன் என்று இவர் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? ஆகவே, அவர் கூறியிருப்பது ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. அவர் முன்பு கொடுத்த வாக்குமூலம் குழப்பமானதா அல்லது அவர் இப்போது கொடுத்திருப்பது குழப்பமானதா என்பது ஆராயப்படவேண்டிய விஷயம்.

அந்தப் பிள்ளையாருக்கு வசூலான பணத்திற்காக ஒரு அதிகாரியைப் போட்டது என்பதினால் அரசாங்கம் அதை அங்கீகரித்ததாகப் பொருள் அல்ல. ஐயப்பனுக்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று நினைத்து, அண்ணங்காராச் சாரியாரின் அறிக்கைக்குப் பிறகு மௌனியாகிவிட்ட ஆசாமி, இப்போது பிள்ளையாரை வைத்துச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஈடுபட்டபோது, ரூ. 30,000 வரை சேர்ந்தபோது ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறவர்களை அங்கே அனுமதித்தால் பணத்தைச் சுருட்டிக்கொண்டு போய்விடுவார்களே என்பதற் காகவே அறநிலைய அதிகாரிகள் அங்கு சென்றார்களே தவிர, அதை அங்கீகரித்து விட்டார்கள் என்று பொருள் அல்ல. அறநிலையத்துறை அந்தப் பிள்ளையாரை அங்கீகரிக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மக்களை ஏமாற்றும் நோக்கத் தோடா அல்லது இந்து முஸ்லீம் கலவரத்தை உருவாக்குகிற ஒரு சூழ்நிலையில் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் பிள்ளையார் வந்ததாகச் சொன்னார்கள். அப்படியானால் பிள்ளையார் நேரடியாகவே வந்திருக்கலாம். உண்மைப் பிள்ளையாரே வந்திருக்க வேண்டும். அப்படி வருவதை விடுத்து