உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

83

நாங்கள் நாட்டிலே திறமைக் குறைவாக நடந்து கொள்வதாகச் செய்திகளை வெளியிடுகின்றன. அதிலும் குறிப்பாக பொன்னப்ப நாடார் அவர்கள் சார்ந்து இருக்கிற கட்சிப் பத்தி ரிகை ஏதோ தலைப்புக் கொடுத்து நம்முடைய மாநிலத்தைப் பற்றிக் குறைவாக மதிப்பிட வேண்டாமென்று கேட்டுக் கொள் கிறேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவசக்திப் பத்திரிகையில் கருணாநிதிக்கு கேரள முதலமைச்சர் எச்சரிக்கை என்று வருகிறது. இப்படிக் கேரள மாநிலத்தில் உள்ள அவர்கள் பத்திரிகைகளில்கூட எச்சரிக்கை விடுவதாக, அந்த மாநிலத்தில் அவர்களுக்கு எதிரான பத்திரிகைகளில்கூட இப்படிச் செய்தி களை வெளியிடமாட்டார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் நாங்கள் தமிழக அரசில் இருக்கும் ஒரே ஒரு பாவத்தால் எந்த மாநிலத்தில் எந்த அமைச்சர் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அது எங்களுக்காக விடப்படுகிற எச்சரிக்கையாக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இங்கே உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்தான் அங்கே முதலமைச்சராக இருக்கிறார்கள். இங்கே உள்ள கம்யூனிஸ்ட் பத்திரிகைகளிலே இதைப் போன்ற செய்திகள் வருமா என்றால் வராது. அவர்கள் இந்த மாநிலத்தில் உரிமைகள் என்று வரும்போது இந்த மாநிலத் தின் உரிமைகளுக்காக நிற்பார்கள். அந்த அந்த மாநிலத்தின் உரிமைகளுக்காக ஆங்காங்கு இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி வாதாடும். அதே போல்தான் நிஜலிங்கப்பா காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த நண்பர்கள் இது ஏதோ கழக அரசிற்கு வருகிறது ஆபத்து, அதற்கு மாத்திரம் தருகிற பதில் என்று எண்ணாமல் தமிழ்நாட்டு மக்களின் உரிமை பாதிக்கப்படுகிற நேரத்திலே நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்ற அந்த எண்ணத்தின் அடிப்படையில் இயங்க வேண்டுமென்று இதனை எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறேன். கேரள அரசுக்கும், நமக்கும் இருக்கிற சுமுகமான சூழ்நிலையை கேரள முதலமைச் சரோடு பேசித் தீர்த்துக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்து விளக்க இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் பயன் பட்டது என்ற அளவிலே இதை விவாதிக்கத் தேவையில்லை, விட்டு விடலாம் என்று தங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.