உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

93

இணைப்பு சம்பந்தமான முயற்சியில் அரசு ஈடுபடும் வகையில் அதன் கவனத்தை ஈர்ப்பதில் நமக்கு வெற்றி கிடைத்திருப்பதாலும், தனியார் துறை பள்ளி ஆசிரியரின் பணிப்பாதுகாப்பிற்கு வகை செய்யும் விதத்தில் மசோதா இறுதி வடிவமாகி சட்டமன்றத்திற்கு வர இருப்பதாலும்,

கவனத்தை

மற்றக் கோரிக்கைகளைக் கவனிப்பதற்கான அரசின் ஈர்க்க இதுவரை நடத்திய நடவடிக்கை போதுமானது என நடவடிக்கைக் குழு கருதுவதாலும் என்று சில கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லி போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். அதில் கையெழுத்து இட்டிருப்பவர்கள் திரு. மயில்சாமி, திரு. சிங்காரவேலு என்ற நடவடிக்கைக் குழுவில் உள்ளவர்கள்.

அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிற மற்றும் சிலர் திரு. ராஜா ஐயர், எம். எல். சி., திரு. சுவாமிநாதன், எம். எல். சி., திரு. கணபதி, எம். எல். சி., ஆகியோர் கையெழுத்திட் டிருக்கிறார்கள். இந்த அறிக்கையை என்னிடத்தில் தருகிற நேரத்தில் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் உடன் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு சாட்சியங்களோடு இப்படி ஒரு அறிக்கை என்னிடம் தரப்பட்டிருக்கிறது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (ஆரவாரம்).

இதைத் தெரிவிப்பதோடு அவர்கள் போராட்டத்தை அவர்களே முன்வந்து நிறுத்திக் கொண்டதற்காக எனது மகிழ்ச்சியை அறிவிக்கிறேன். போராட்டத்தில் ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் கடமையுணர்ச்சியோடு மற்றொரு பகுதியினர் தொடர்ந்து பணியாற்றி வந்தமைக்கு எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் அந்த ஆசிரியப் பெருமக்களுக் கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிலர் தங்கள் செயலுக்காக வருந்தி கடிதம் எழுதித் தந்து மீண்டும் தொடர்ந்து பணிபுரிய