பக்கம்:ஒத்தை வீடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 129 ஓரினச் சேர்க்கை ஒருத்தரின் உரிமை ஈரினச் சேர்க்கையால் என்னத்தை கண்டீர்? - மனித உயிரினம் பெருகினால் உயிருக்கே ஆபத்து - எங்கள் ஓரினச் சேர்க்கைதான் உடனடி மருந்து. மக்கள் பெருகினால் வெள்ளம், எரிமலை, பூகம்பம், புயல், போரென்று வருமாம். மாபெரும் நிபுணன் மால்தஸின் கூற்று. ஒரினச் சேர்க்கையே இந்தக் கூற்றுக்கு கூற்று. கருப்பை இல்லாத சேர்க்கை உருவம் பிறக்காத சேவை. இருப்பினும் எங்களை வெறுக்கிறீர் என்னய்யா நியாயம்? இது அநியாயம். மோகனன், பாடலுக்கு ஏற்ப அபிநய ஆட்டம் ஆடிவிட்டு, கால்களை லேசாய் ஆட்டி ஆட்டி பலமாய் நின்றான். அப்போது ஒரு பின்னணிக் குரல். "மோகனனின் பரத நாட்டியத்தால் நீங்கள் பாலியல் ரீதியாக பரவசப்படுவது புரிகிறது. ஆகையால், தில்லானா இல்லாமல், இப்போது கதக் ஆட்டத்தை ஒரு சாம்பிளாக ஆடிக்காட்டுவான் நம் மோகனன்." மோகனன் எழுந்து, சபைக்கு சிரம் தாழ்த்தி கைகூப்பி வணக்கம் செய்து கொண்டே, உள்ளே போய்விட்டான். கீழே கிடந்தவனும் இரண்டு குதி குதித்துவிட்டு போய்விட்டான். ஆடும் மேய்த்தாயிற்று. அண்ணனுக்கும் பெண் பார்த்தாயிற்று. என்பது போல், மோகனன் இளைப்பாறுவதற்கும், ஆடை மாற்றத்திற்கும் ஏதுவாக, ஒவ்வொரு இசைக்கருவியும் தனி ஆவர்த்தனம் செய்தது. முப்பது நிமிடங்களில் மோகனன் திரும்பி வந்தபோது, கைதட்டு வலுவா? இசையோசை வலுவா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இப்போது, மோகனன் பட்டுக் கச்சை கட்டியிருந்தான். கழுத்தில் வெவ்வேறு அளவிலான விதவிதமான நகைகளை போட்டிருந்தான். கால் சதங்கையிலும், கை மணிகளிலும் மாற்றம் இல்லை. ஒரு பக்கத் தாவணியைக் காணவில்லை. பத்தம் பசலியாக ஒலித்த அதே இசைக்கருவிகள், இப்போது அட்டகாசமாய் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. மோகனனின் உடல் ஒற்றை நேர்கோடாய் நின்றது கால்கள் சமபாத நிலையில் ஊன்றின. இசைக்கு ஏற்ப அவன் இரு கால்களையும் மூன்றடி அளவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/129&oldid=762182" இலிருந்து மீள்விக்கப்பட்டது