பக்கம்:ஒத்தை வீடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 133 செய்து தனது துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற அவர் எண்ணம் "சம்பில் விழாத கார்ப்பரேஷன் தண்ணிர்" போல் ஆனது. ஆளை விட்டால்போதும்: மோகனன், நிலமையை புரிந்து கொண்டான். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை, காதலுக்கு கண் உண்டு. பெண் இல்லை. இந்த ஐம்பதிலும் அழகாக தோன்றும் காந்தராஜை எவனும் எதுவும் செய்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையானான். அவரை மேடைக்குப் பின்புறமாய் அழைத்துச் சென்று எப்படியோ அவரது காருக்குள் ஏற்றி விட்டான். இதற்குள் மது மயக்கத்தில் எல்லோரும் கிறங்கிப் போனார்கள். சிலர் பேண்டை அவிழ்த்து அண்ட்ராயரோடு சேர்த்து தூக்கி எறிந்தார்கள். பலர் சிலரை துகிலுரிந்தார்கள். அத்தனையும் அம்மனங்கள். அதில் ஆனந்த பரவசமானார்கள். ஒருவரை ஒருவர் இழுத்துப் போட்டு கவிழ்த்துக் கொண்டார்கள். கவிழ்ந்து கொண்டார்கள். 3 படித்துக் கிழித்தான் என்று இளக்காரமாக சொல்வார்களே, அந்த சொல்லடையை சிறிது மாற்றி, செல்வாவை, எழுதிக் கிழித்தான் என்று சொல்லலாம். எழுதுவதும், எழுதிய காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்துப் போடுவதுமாக இருந்தான். அந்த அறை முழுவதும், குப்பைத் தொட்டிபோல் தோன்றியது. போதாக் குறைக்கு எழுதிக் கிழித்த காகிதக் கூறுகள், மேலே சுற்றிய மின்விசிறியினால், அவன் முகத்தில் அடிப்பது போல அரை குறை வார்த்தைகளோடு முட்டிமோதின. காகிதத்தைக் குத்திய பேனா முள், அவன் தலைக்குள் வண்டாக மாறி குடைந்து கொண் டிருந்தது. களைத்துப் போன தலையும், துடித்துப் போன கண்களும், வலித்துப் போன முன் நெற்றியும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தன. தலை, பூமியைப் போல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந் தாலும், அதே பூமி சூரியனைச் சுற்றுவது போல், அடுத்த வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள கவிதாவை, மானசீகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. I கவிதை எழுதுவதற்காக, காகித கற்றைகளை அடுக்கி வைப்பதிலேயே அவனுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/133&oldid=762187" இலிருந்து மீள்விக்கப்பட்டது