பக்கம்:ஒத்தை வீடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புதைமண் செல்வா, உப்பிப் போன தனது சட்டைப் பை யை அழுந்தப் பிடித்தபடியே, "கவிதா. கவிதா." என்று காந்தக் குர லாடு சோபா செட்டுகளை கொண்ட வரவேற்பறையின் ந( )வில் நின்று கூவினான். உடனே கதவில்லாதது போல் தோன்றிய பிளைவுட்டால் ஆன கிழக்கத்திய தடுப்பிலிருந்து ஒரு தேக்குப் பலகை திறந்தது. மோகனன், இரண்டு ஆண்கள் கட்டி அணைக்கும் முத்திரை படம் கொண்ட பனியனோடு நின்றான். லாகவமான உதட்டோரப் புன்னகை. சுருள் சுருளான புல்தரை மாதிரியான கிராப்பு. பிடரியைத் தாண்டிய முடி ஒற்றைக் கடுக்கன். கையில் ஒற்றை வளையம், நீளவாக்கு முகம், மாம்பழ நிறம், முகத்தில் கொய்யாக்காய் போன்ற வடுக்கள். செல்வா, வெலவெலத்துப் போனான். எங்கே நிற்கிறோம், யார் முன்னால் நிற்கிறோம் என்பதுகூட தெரியாத அதிர்ச்சி. ஒரே ஒட்டமாய் ஓடிவிடலாம் என்பதுபோன்ற திருப்புமுனை பார்வை. அதுவே குற்றத்தைக் காட்டி கொடுக்கும் என்ற ஞானம். ஆனாலும், மோகனன் அவனை சிரித்தபடியே பார்த்தான். அந்த சிரிப்பை புன்னகையாக்கியபடியே, அவன் மெல்ல நடந்து வந்தபோது, செல்வாவின் பயம் லேசாய் தெளிந்தது. கூடவே சிரிப்பாய் வரவேற்கும் மோகனன் மீது அன்பும், இப்படித் தன்னை மாட்ட வைத்த கவிதா மீது கோபமும் வந்தது. மோகனன், செல்வாவை நெருங்கி, ஐ எம் மோகனன் என்று கையை நீட்டினான் இடுப்போடு ஒட்டிக் கிடந்த செல்வாவின் வலது கையை பிடித்துக் குலுக்கினான். "நீ யார்” என்று அவனை கேட்காததிலிருந்து, அவனை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. செல்வாவின் கையை பிடித்த மோகனன், சிறிது நேரம் அதை வருடிக் கொடுத்தபடியே நின்றான். செல்வாவிற்கு பயம் போய்விட்டது. இவன் ஜென்டில்மேன். இவனைப் போய் கவிதா அசல் பேர்க்கிரி என்றாளே. அதோடு அசிங்கம் பிடித்தவன் என்றும் கத்தினாளே. மோகனன், செல்வாவின் கரத்தை விடுவித்துவிட்டு, அறைக் கதவை நோக்கிப் போட்ட ஒற்றைச் சோபா இருக்கையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தான் எதிரே உள்ள சோபா செட்டில் செல்வாவை உட்காரும்படி சைகை செய்தான். அவன் உட்கார்ந்து முடித்ததும், மோகனன் தோழமையோடு கேட்டான். "நீங்க பக்கத்து வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற கிச்சன் வீட்டு பையன்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/160&oldid=762217" இலிருந்து மீள்விக்கப்பட்டது