பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒன்றே ஒன்று

கூறுவர். ஒருவன் நம்மை அடிக்கிருன்; காய் நம்மைக் கடிக் கிறது. இவற்ருல் வரும் துன்பத்தைப் போன்றவை ஆதி யாத்மிகம். திடீரென்று நோய் வருதலைப் போன்றன. ஆதி தைவிகம். கல்வில் கால் இடறுகிறது: தியினல் புண் உண் டாகிறது. இத்தகையவை ஆதிபெளதிகம். இந்தத் துன்பங் கள் உயிர்களே வருத்துவதனால் தாபம் என்ற பெயரைப் பெற்றன. மூன்று தாபங்களாலும் துன்புறுகிறவனுக்கு இறைவனுடைய திருவருள் கிடைத்தால் அவை ங்ேகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தியில் ஒரு வருக்கு அன்பு உண்டாயிற்று. திருக்காளத்திக்குப் போய் நம்முடைய தாபத்திரயங்களினின்றும் விடுதலே பெற வேண்டும் என்ற துணிவின்மேல் புறப்பட்டுவிட்டார். அப்போது, அது காறும் தம்மை வருத்திய துன்பங்களே நோக்கி, "துன்பங்களே! நீங்கள் இனிமேல் வேறிடம் பார்த்துக் கொள்ளுங்கள். காம் தாளத்தி காணத் தீர்

மானித்துவிட்டோம் என்கிருர், -

நக்கீரர் என்னும் புலவர் இந்த முறையில் ஒரு பாட்டுப் பாடுகிருர். -

  • * - - 女

- துன்பங்களைப் பார்த்து மரியாதையாகப் பேசுகிருர். "தாபத்திரயமான சகோதரர்களே!' என்பது போல அழைக்கிருர்,

இடரீர்! - -

இடர்-தன்பம், அவற்றை உயர்திணையைப் போல வைத்து இடரீர் என்றர். இடரார் என்பதன் விளி இது. -

"இதுவரைக்கும் என்னிடம் நீங்கள் வாழ்ந்திர்கள். நானும் இடம் கொடுத்தேன். இனிமேல் அப்படி இருக்க வொண்ணுது. உங்களுக்கு ஏற்ற இடம் ஒன்றைத் தேடிக் கொண்டு சரியான காலத்தில் போய்விடுங்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/46&oldid=548467" இலிருந்து மீள்விக்கப்பட்டது