பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஒன்றே ஒன்று

செயலால்ை, இந்த வாழ்வுக்குப் பின் நம் தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள ஏதாவது செய்வதுதானே அறிவுடை மைக்கு அழகு கியாயமும் அதுதானே?

இப்போது ஈட்டும் பொருள் பின்பு பயன்படுகிறது. இந்தப் பொருள் இப்பிறவி ஒழிந்தால் உடன் வராது. ஆத லின் இந்த வாழ்வின் முடிவாகிய மரணத்துக்குப் பின் நமக்குப் பாதுகாப்பாக எது நிற்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அதைச் சேமிக்க வேண்டும். அப்போது இன் பம் அடைவதற்குரிய பழக்கத்தை இப்போதிலிருந்து செய்ய வேண்டும். X- - -

அப்போது பாதுகாப்பாக கிற்கும் பொருள் எது? அப் போது இன்பத்தைத் தரும்பழக்கம் எது? o

பொருளாதாரம் இவ்வுலக வாழ்க்கைக்குத் தான் உதவும். அவ்வுலக வாழ்க்கைக்கு அருளாதாரம் வேண் டும்.

"அருளிலார்க் கவ்வுலகம் இல்லை, பொருள் இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு" - - - என்று வள்ளுவர் கூறுகிருர் ஆதலின் அருளைச் சேமித் துக்கொண்டால் இவ் வாழ்வுக்குப் பின்னும் கன்ருக வாழ லாம். அந்த அருளேச் சேமிப்பதற்குரிய செயல்களே - இப்போதே செய்து பழக வேண்டும். - இறைவன் திருவருளேப் பெறுவது, யாரோ செல் வரைப் புகழ்ந்து மு. க ம ன் பேசி அவரிடமிருந்து பொருளைப் பெறுவது போன்றதன்று. அருள் என்பது காசு பணம் போல், ஆடை அணிபோல உருண்டு திரண்டு வாங்கவும் கொடுக்கவும். அமைந்தது அன்று. அது ஒரு கிலே. உலகில் நாம் இன்பம் துன்பம் என்று சொல்கிற இரண்டு நிலைகளே அறிவோம். கடலில் அகல உயர்ந்தால் அதன்கீழே சற்றே குழிவு தோன்றும் அலையும் குழிவும் இல்லாத கடல் அமைதியாக இருக்கும். இன்பம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/64&oldid=548485" இலிருந்து மீள்விக்கப்பட்டது