பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௪

ஒப்பியன் மொழிநூல்

“க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற்றாய் மொழிக்கு முதலாக வரும்.

“ச் என்ற மெய்யெழுத்தும் அவ்வைந்து மெய்யெழுத்துகளைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெழுத்துகளோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும்.

“ஆனால், க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஒள என்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாக வரா” என்பதாம்.

"(எ - டு :) நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது)” [1] என்பது.

இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித்துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்று கின்றது.

இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், பண்டைத் தமிழிலக்கணங்களெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற்பட் டவையென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் கடக்கும் அல்லது தப்புவிக்கும் முகமாக, அவர் காலத்திற்கு முன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்குவதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலியன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லையென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மை யையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலக வழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதனவாகவும் அதன் சொல் வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவுமிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு :—

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம்,


  1. 1.செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15,பரல் 2,பக்.67,69.