பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௫௮

ஒப்பியன் மொழி நூல்

அகத்தியருக்கு முத்திய தமிழ் நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது.

தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென் இத்தொடக்கத்தன வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட கலியும் குருகும், வெண்டானியும், வியாழமாலையாகவலுமென இத்தொடக்கத்தனவும் கடைக்கழகத்தாராற் பாடபட்ட பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும் இப்போதில்லை.

தலைக்கழகக் காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக் கழகத் திலக்கண மாகிய மாபுராணமும் இசை நூலும் பூதபுராணமும் இப்போதில்லை,

இனி, அடி நூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரிய முறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திர காளியம், ஐந்திரம். ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, களவு நால், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கை பாடினியம், குண்டலகேசி, குண நூல், கோள் நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுட வெண்பா , சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கை பாடினியம், சிறுகுரீ இயுரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதியம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை, பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது). புணரிப்பாவை, புதையல் நூல், புராண சாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திர நூல், மயேச் சுரர்யாப்பு. மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி. முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், லச்சத் தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக் கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை யிப்போ தில்லை,