பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியம் வழிநூலாதல்சுக்க

“கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்”

(புறத். 19.)

என்று. ஆனந்தப்பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க.

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பாள் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முனனொரு வகையா
னிந்திர னெர்ட்டாம் வேற்றுமை யென்றனன்”

என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர்.

அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இவற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை,

“மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி”

என்று தொல்காப்பியம் பாயிரத்திற் கூறியதாலறியலாம்.

“ஏழியன் முறையது” என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப்பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும்.

பாணினி கி. மு. 5 ஆம் நூற்றாண்டினராயிருக்க, அவரியற்றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்?

ஐந்திரம் என்பது இந்திரன் என்றோர் (ஆரியப்) புலவர் இயற்றிய இலக்கணமாகும். அகத்தியர்க்கு முன்னமே ஒரு சில ஆரியர் தென்னாட்டிற்கு வந்திருந்தமை, ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று தொல்காப்பியர் கூறுவதாலும், கந்தபுராணத்தாலும், திருமாலின் முதலைந்து தோற்றரவுச் செய்திகளாலு மறியப்படும்.

ஐந்திரம் என்பது வடமொழியிலக்கணமா தென்மொழியிலக்கணமா என்று திட்டமாய்க் கூற இயலவில்லை. ஆயினும்,