பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தயோர் தமிழ்நூற் பயிற்சியைப் புதுப்பித்தமை

௧௭௩

எங்கேனும் குறிப்பிடவில்லையென்க. தொல்காப்பியம் அகத் தியத்திற்குப் பிந்தினதாதலின், அதிலும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதை யறியாதார் பிற்காலத்தில், தொல் காப்பியர் அகத்தியத்தைச் சா'த்ததாக ஒரு கதை கட்டினர்.

தொல்காப்பியர் அகத்தியரைத் தம் ஆசிரியராகவேனும் ஓரிடத்தும் குறிக்காமையால், அவ்விருவர்க்குமிருந்த தொடர்பு, வேதநாயகம் பிள்ளைக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மிருந்தது போன்றதோ என்று ஐயுறக் கிடக்கின்றது.

அகத்தியர் தமிழ்நூற்பயிற்சியைப் புதுப்பித்தமை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், எங்கனம் மடங் களிலும் தமிழ்ப்புலவர் வீடுகளினும் பயிலப்படாது குவிந்து கிடந்த பல தமிழ் நூல்களைத் திரட்டி அசட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்களோ, அங்ஙனமே அகத்தியரும் சிறிதுபோழ்து பயிலப்படாது கிடந்த தமிழ் நூல்களைத் திரட்டி யாராய்ந்து, தமிழ்நூற் கல்வியைப் புதுப்பித்தாரென்க.

இதனால், தலைக்கழகம் முடிந்த பின்னரே அசுத்தியர் தென்னாட்டுக்கு வந்தாரென்பதும், அக்கழகம் நின்றுபோன மைக்குச் சில ஆரியரே காரணமாயிருந்திருக்கலாமென்பதும், இங்ஙனம் தமிழைத் தளர்த்தோரும் தமிழை வளர்த்தோருமாக இருசாரார் தமிழ் நாட்டிற்கு வந்த ஆரியர் என்பதும் நுனித் தறியப்படும்.

மேனாட்டில் முதல் முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C 421) என்றும். அவர் பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C,384) இடைச் சொல்லும் எச்சமுங் கண்டுபிடித் தாரென்றும், மேனாட்டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனிசியஸ் நிராக்ஸ் (Dionysius Thrax, B.C; 100) எழுதிய இலக்கணமேயென்றும் மாக்ஸ் முல்லர் கூறுகிறார்:

வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 7ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியிலிருந்தன. ஆயினும், அவை யாவும்