பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச் சொல் வளம்

௧௭௫

10ஆம் நூற்றாண்டென்றம். " பொல்லப்படுகின்றது: கன்னடத்தில் இலக்கியம் தோன்றியது கி. பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி. பி. 10-ஆம நாற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி. பி. 13ஆம் நூற்றொண்டென்றும் தமிழுலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதலாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலின், திராவிட மொழிகளில் தமிழே — மொழியாயினும் நூலாயினும்—மிகத்தொன்மை வாய்ந்ததென்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

தமிழின் திருத்தம் :

திராவிட மொழிகட்குள் தமிழ் மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும்.

தமிழ்ச் சொல் வளம்

(1) தமிழின் வளம் :

தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணர்ந்திலர்.

உண்மையுடைமை யென்னுங் குணம். நினைவு சொல் செயல் என்ற முக்கரணங்களையுத் தழுவியது என்பதை உணர்த்தற்கு, உண்மை (உள் +மை) வாய்மை (வாய்+மை), மெய்ம்மை (மெய்+மை) என மூன்று சொற்கள் தமிழிலுள்ளன.

மனத்தின் வெவ்வேறு வினையையுங் குறித்தற்கு வெவ்வேறு சொல் உளது.

கா : உள்(ளு). to will (உள்ளம் - will): உணர், to feel' to comprehend (உணர்வு - sentiment, உணர்ச்சி —feeling); நினை , to think. to remember (நினைவு--thought, நினைப்பு-memory); நினைவு கூர், to remember, to commemorate ; முன்(னு , to propose, to 'think, to intend (முன்னம்:—intention. indication) ; முன்னிடு, to propose, to set before, முன்னிட்டு having proposed, having set before, for the purpose of. ஒரு காரியத்தை முன்னிட்டு என்னும் வழக்கை நோக்குக. முன்னீடு = Proposal : உன்(னு), to