பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்


பே-பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும். கா : பேயப்பேய (விழிக்கிறான்), பேத்தப்பேந்த (விழிக்கிறான்):

பேந்து: ஓ. நோ. Ger, feind; Dut. vijand: A. S. feond; E. fiend.

சேம்பர் அகராதியில், A. S. feond, pr. p. of feon, to hate என்று கூறப்பட்டுள்ளது: feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளாயிருக்கலாம்.

பேய் - அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது: பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அதற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது.

பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம், மந்திரம், மாந்திரிகம், மாத்திரிகள் என்பன முறையே மந்திர மொழிக்கும் வினைக்கும் வினைஞனுக்கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது.

பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழி படுதல் ஐத்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகா அவளை வாலை (-இளையள், கன்னி) என்பர்.

சுட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புக் களாகும்:

பேய்கனில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க.

பூத வணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந்ததினாலேய, சிவபெருமான் பூத கணங்களுக்குத் தலைவர் எனப்பட்டார்.

பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொது பொது (இரட்டைக் கிளவி), பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து - பொந்தன்-மொந்தன். ஓ-- உ - ஊ, பொது - (புது)-புது. இரும்பூது - இறும்பூது. புது+