பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உசுடு அது என்னும் பெயர் உயர்திணைக்கும் வழங்குமாறு:யார் அது? கொற்றனது மகன் : சுட்டுப் பெயர்கள் அவன்--ஆண்பால் அவள்---பெண்பால் அவர் - பலர் பால் அது ஒன்றன்பால் அவை. பலவின்பால் சேய்மைச் சுட்டுப் பெயர்கள் இங்கனமே அண்மை யிடைமைச் சுட்டுப்பெயர்களும், இடைமைச் சுட்டு தமிழில் உலகவழக்கற்றது . இந்தியில் சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. இந்தி நிலை முந்தியது, அதன்பெயர் பிந்தியது) வினாப்பெயர்கள் ஏவன் - எவன் ஏது - எது ஏவள் - எவன் ஏவை எவை ஏவர்--- எவர் ஏ-யா, யா+அன் யாவன், இங்ஙனமே ஏனை வீறகளையும் ஒட்டிக்கொள்க: யா என்னும் வினாவடி, அஃறிணைப் பன்மை வினாப் பெயராகச் செய்யுளில் வழங்கும், காலப்பெயர் காலம் என்னும் பெயர் செந்தமிழ்ச்சொல்லே யென்பது, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள 'காலம் என்னும் சொல் எம் மொழிக்குரியது' என்னுங் கட்டுரையிற் கண்டு கொள்க. பொழுது : பொழுது = சூரியன், வேளை (சிறு பொழுது) பருவகாலம் (பெரும் பொழுது.) பொள்-(போள்)-போம், - போழ்து-(பொழுது)-போது. ஒ. நோ, வீழ்து+ விழுது,