பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக முதன் மொழிக் கொள்கை கூகக


இகபரம் என்னும் வழக்கை நோக்குக; வீடு = துறக்கம், இல்லம் இல் = வீடு, உள். உள் = உட்புறம், மனம். உள்+அம் - உள்ளம்-உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே, நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர், ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆத்ம நிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் X புறம்.

மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மை யொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mec - முதலிய வேற்றுமைபெற்ற பெயர்கள் : என்பதினின்று தோன்றுமே யொழிய அகம் என்பதினின்று தோன்றா." go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று, அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய wend - என்பது வழங்குவது போன்றது அகம் என்பது.

(5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இஸ்கூல் [School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் தைக் காட்டும். தாவு = இடம், தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கை நோக்குக,

புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல்லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்கு மிருத்த தொடர்பைக் காட்டும்.

புரிதல் = வளைதல், L. spira, Gr: speira, E, spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை, ஓ. நோ. thread: from thrawan (திரி), to twist. புரிதல் = மனதில் பதிதல், விளங்குதல், L. prehendo== புரிகொள். E. prehend-apprehend, comprehend etc. புரி-புரி (வ.) - வளைந்த மதில், கோட்டை மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ. நோ, கோடு+ஐ= கோட்டை , கோடு+அம் கோட்டம்--koshta (sans)= மதில் - சூழ்ந்த கோயில்,

வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்ப தினின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என்று பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே. கொடு+ அம் கொட்டம், 'கொடு+இல் = கொட்டில்,


  • Historical outlines of English Accidence, P. 177.