பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக முதன் மொழிக் கொள்கை உசு


கா: உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலிகள், எழுத்து மூறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலை நூல்கள் முதலியன

வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென்சொற்களென்பது, மூன்றாம் மடலத்திற் காட்டப்படும் வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும் பாலன, ஆரியர் வருமுன்னமே வட இந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கியவையென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும்:

உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரி பிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே நன்றாகச் செய்யப்பட்டது' என்னும் பொருள் கொண்ட 'சமஸ்கிருத்' என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம் மொழிக்கிட்டுக் கொண்டனர். வடமொழியை ஆரியத்திற்குக் கூட மூலமொழியாகக் கொள்ளவில்லை மேனாட்டார்.*

வடமொழி முதிர்ச்சியைக்காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின்றேன். மெய்யெழுத்துக்களின் தொகை :- தென்கண்ட (ஆத்தி ரேலிய) மொழிகளில் 8 ; பல நீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத்தீனினும் கிரேக்கிலும் 17: ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; காப்பிரி (Kaffir) யில் 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக்கியத்தில் 32; வடமொழியில் 39: அரபி. பெர்சியம், சமஸ்கிருதம் என்னும் மூன்றன் கலவையான இந்துஸ்தானியில் 48, இத் தொகைகள் மாக்ஸ் முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறா திருத்தல் காண்க.

இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொழியாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்குமென்க.

திராவிடம் சிறிய குடும்பமேயாயினும், பல காரணம் பற்றித் தனித்துக் கூறப்படற்கேற்றதாகும்.

  • Principles of Comparative Philology, p. vii.