பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்...தமிழ்மொழிக்கதிகாரிகளாமை

67

துணிவதற்குக் காரணமென்ன வெனின், நச்சினார்க்கினியர், மேற்கூறிய நூற்பாக்களுள், முதலதற்கு,

எ-டு: கொல்யானை, வெள்யாறு.

“இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும், நிலைமொழி வரு மொழி செய்வதற்கு இயையாமையின், 'மருவின் பாத்திய' என்று கூறுவாராதலின், இவ் வாசிரியர் இவற்றை ஒருமொழி யாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக் கொண்டு, உதாரணங் காட்டுதும்” என்று கூறினவர், பின்பு, “அன்றி இவ் வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து, வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமன்றி, ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவு முளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற்போதலே நன்றென்று கூறலுமொன்று” என்றும்;

மூன்றாவதற்கு,

“இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.

“இனி உரையாசிரியர் உரிஞ்யாது, பொருந்யாது, திரும் யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரண மாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி, அதன்கண், 'மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்' (எழு. 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் 'உகரமொடு புணரும் புள்ளி யிறுதி' (எழு. 163) என்றும், பிறாண்டும், ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர் ஆதலின், ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னும் குற்றமாம். அதனால், அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க” என்றும்;

நாலாவதற்கு,

“இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், 'வகார மிசையு மகாரங் குறுகும்' (எழு. 330) என்ற விதி வேண்டா வாம்” என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம்