பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்

தமிழ் வாழ்த்து

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

தரவு 1

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே”

2

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”.

(வதனம் - முகம், தரித்த - அணிந்த, திலகம் - பொட்டு, வாசனை - மணம், உதரம் - வயிறு).

நூல்

1. மொழிநூல்

1. மொழி

மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக் கொருவர் வெளியிடுதற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி.

2. மொழிவகை

உலக மொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத் (Atlas) தில் குறிக்கின்றார்.