பக்கம்:ஒய்யாரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஒய்யாரி


கறுமணிக் கண்கள் பாதையோரங்களில் இருந்தவர்களது தன்மையை விழுங்கப் பாயும். ஆள் விட்டு ஆள் தாவித் துள்ளும்.ஆடம்பரக்காரன் எவன் மீதாவது படியும்.செல்லப்பிள்ளை ஒருவனது வசியம் செய்யும் வழி என பார்வை பரப்பி மேலும் மேலும் எவன் மீதாவது படியும். செல்லப்பிள்ள மற்றும் ஒருவனை வசியம் செய்யும் வலை யெனப் பார்வை பரப்பி மீளும்.

அவள் இன்பக் கவிதை. சிங்காரியான அவளுக்கு எப்படி மினுக்கிக் குலுக்கி காந்தமாய் திகழ வேண்டும் எனும் கலை நன்கு கை வந்திருந்தது. அந்த வீதியில் தினந்தோறும் மாலை வேளையில் அவள் தனக்குத் தானே விளம்பரமாகத் தளுக்கித் திரிந்தாள்.

வழியோடு போகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவளை ஒரு தரமாவது பாராமல் போக முடியாது. அவள் வனப்பை ஒரு முறை ரசித்த கண்கள் மீண்டும் மீண்டும் அவளைச் சுற்றி வளையவரத் தவறாது. வீட்டு ஜன்னலின் பின் நின்றும், மாடியிலிருந்தும், உலாவி வருகின்ற உல்லாசக்காரியைக் கண்டு களிக்கக் காத்திருப் பவர்களுக்கு குறைவே கிடையாது. அவள் பலரது பார்வைக்கு விருத்து. எண்ணற்றோரின் பேச்சுக்குப் பொருள். சிலரது ஏக்கத்துக்கு ஒரு தூண்டுகோல்,

அடிக்கடி அவளைப் பார்த்தவர்கள் அவளைப் பற்றி ஆராய வேண்டும் என எண்ணினால் தவறே கிடையாது. முதல் முறை பார்த்ததுமே,'பிரதர், இவ யாரு?'என்று பக்கத்திலிருப்பவரிடம் கேளாத ரசிகர் இருந்தால், அவரது அருகில் ரசிகசிகாமணி ஒருவருமே இல்லை.எனறு தான் அர்த்தம்.

"என்ன வெளியே போகலாமா இப்படி 'சும்மா' ஒரு வாக்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/6&oldid=1489749" இலிருந்து மீள்விக்கப்பட்டது