பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

காவல் வீரர்கள் தங்க வயலுக்குச் சென்றார்கள். குடியானவனிடம் மன்னர் அழைத்துவரச் சொன்ன செய்தியைக் கூறினார்கள்.

நடந்த செய்திகளை அறிவாளன் அந்தக் காவல் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தன் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக் கொண்டான். காவல் வீரர்கள் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக் கொண்டான். அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.

அறிவாளன் ஒரு ஏழைக் குடியானவன்தான். ஆகையால் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அரசருக்கு அவன் மீது நல்ல நம்பிக்கை உண்டாயிற்று.

அய்யா அறிவாளரே! பொன்னி நாட்டில், அதுவும் அரண்மனையில் ஒரு திருட்டு நடந்திருப்பது பெரிய அவமானமாய் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உயர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அது அவர்கள் பிறந்த குலத்துக்கே அவமானமாகும். ஆகையால், இதில் நீங்கள் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். வெறும் அய்யத்தில் ஒருவரைக் குற்றம் சாட்டக்கூடாது, என்று மன்னர் விளக்கமாகக் கூறினார்.