பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

"அரசே! தங்களைப் போலவே எனக்கும் மாய மந்திரத்தில் நம்பிக்கை கிடையாது. இது நான் செய்த தந்திரமே!

இருப்புச் சட்டியின் அடிப்புறத்தில் கரியைப் பூசி வைத்தேன். அதன் மீது, உள்ளங்கையை வைத்தவர்கள் கையில் கரி பிடித்திருந்தது.

இந்த ஆள் மட்டும் பயந்து கொண்டு இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் இவர் கையில் கரி படியவில்லை. எனவே, இவர்தான் திருடர் என்று முடிவு செய்தேன்" என்றான்.

திருடியவனிடமிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டது. அவனுக்குச் சிறைத் தண்டனை கொடுத்தார் அரசர். வாக்களித்தபடி அறிவாளனுக்கு அவன் குத்தகைக்கு உழுத நிலம் முழுவதையும் விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொடுத்தார்.

அறிவாளிகள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள்.