பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61
பட்டுத் துணியெடுக்க
பாய்மரத்தில் செல்லுவதாய்
விட்டுப் பிரிந்தாரேன்
வீட்டுக்குத் திரும்பவில்லை?


என்னை மறந்தாரோ?
இல்லை சினந்தாரோ?
உன்னை மறந்தாரோ?
ஊரை மறந்தாரோ?


இளவேனில் காற்றெல்லாம்
என் கண்ணில் நீர் பெருக்கி
உளம்நோகச் செய்கிறதே!
உம் நினைப்பால் வாடுகிறேன்!


கோடையனற் காற்றெல்லாம்
கொண்டுவரும் கண்ணீரீல்
ஆடவரே உம்பிரிவும்
அதிர்ச்சியை யுண்டாக்குதையா!


காலமெல்லாம் காத்திருந்தோம்
கண்மணியும் நானுமிங்கே
மாலையிட்டும் மறந்தீரோ?
மகன் பெற்றும் மறந்தீரோ?

அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள், கடற்கரையோரத்தில் கைப்பிள்ளையுடன் நிற்கும் அந்தப் பெண்ணை அடிக்கடி கண்டனர். அந்த வழியாகக் கடலில் செல்லும் படகுக்காரர்களும் அவளை அந்த இடத்திலேயே காணலாயினர், விரிகடலில் செல்லும் போது, தோதான காற்றுகள் அடித்தாலும் அடிக்காவிட்டாலும், அந்தப் பெண் பொறுமையோடு நின்று