பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

105 |  வெள்ளியங்காட்டான் 

அவரின் கவிதைகள் நீண்ட காலமாக அவள் வந்து கொண்டிருந்த ஒரு நாளிதழில் வேலை கிடைத்தது. இருபது கிலோ மீட்டர் நடந்தார். ஒரே ஒரு ரூபாய் கூலிக்காக ஆயினும் கூட அவர் நொந்து கொண்டோ. அலுத்துக் கொண்டோ நான் பார்த்ததில்லை . தமிழகம் தவிர வேறு எந்த ஒரு நாட்டினும், ஒரு கவிஞனுக்கு இத்தகைய கதி நேர்ந்திருக்காது.

அவர் அடிக்கடி சொல்வதுண்டு. 'என்னைப் போன்ற ஒரு கவிஞன் வாழ தமிழ்நாடு ஏற்புடையதல்ல என்று.

'ஒரு நாட்டிற்கு அரசனாய் இருப்பதைக் காட்டிலும் சத்யத்திற்கு அடிமையாய் இருக்கவே விரும்புவேன்' என்று வாக்கியம் அவருக்கு மிகவும் பிடித்து வாழ்ந்ததால்தான் தமிழகத்திற்கு அவரைப் பிடிக்காமல் போய்விட்டதோ என்னவோ?

நான் பஞ்சாலையில், 'தொழிலாளியாய்' வேலை பார்த்த ஒருநாள், என் தலையிலிருந்த பஞ்சைப் பொருக்கியவாறு. “கவிஞனுக்கு தமிழகம் தந்த சிறந்த பரிசம்மா இது”, என்றபோது என் உள்ளம் விம்மியது.

“தலை நிமிர்ந்து நிற்பேன், மொழியால் தமிழ் என்றுரைப்போன்” என்று கவிதை எழுதியவர். அறுபது வயதில், சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேர நினைத்தபோது மனம் தமிழக எல்லை வரை சென்று தேடியிருக்கும். ஆனால், இங்கு அவரை ஏற்றுக் கொள்ள நாடோ, உடன்பிறப்போ, சுற்றமோ, நட்போ , கவித்வமோ , ஊ...கும்... தமிழகத்தில் எதுவும் செல்லுபடியாகவில்லை போலம்.

கர்நாடகாவிற்குச் சென்றார். யார்...? எப்படி அவருக்கு அறிமுகம் என்பதை இதுவரை அறியோம். அவர் உழைத்தார் மண்வெட்டி கொண்டு கவிதை எழுதிய கை, மண்வெட்டியையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டது.

என் 'சுயம்' ஒரு சமயம் குடும்ப சூழலில் சிறிது பாதித்தபோது அவர் கேட்டார். “நீ வயிற்றுச் சோற்றுக்காகவோ வாழ்கிறாய் அம்மா!” என்று பாரத தேசத்தில் பெண்மை பிறந்துவிட்ட பிறகு சுயமாவது...? சுரணையாவது....?

ஆனால் கவிஞனுக்கு அது உயிர் போன்றது சுயமரியாதை இழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் துறப்பது அவனுக்கு எளிது.