பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

107 |  வெள்ளியங்காட்டான் 

சு.ரா.வின் ‘அதுதானே கேட்டேன்’

கோவை பாரதிய வித்யா பவனில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த சு.ரா. அவர்களிடம், என் தந்தையின் சில வெண்பாக்களைக் கொடுத்தேன். படித்தவர் "இது எப்போது எழுதியது?" என்றார்.

“சுமார் 25 வருடங்களுக்கு முன்னால்”

"அதுதானே கேட்டேன்" என்றவர், கீழே வந்த லிப்டில் புகுந்து விட்டார். பின்னர், இதன் விளக்கம் என்ன?' எனக் கேட்க நினைத்தபோது அவர் நம்மிடம் இல்லை. ஆனால்..!

இன்று என் தந்தையின் கடிதங்களை வெளியிடும் நிலையில் 'சு.ரா' வின் கட்டுரைகள் காணக்கிடைத்தது. அதில் சில வரிகளின் உண்மை நெஞ்சில் நெருப்பை மூட்டின.

'இங்கு கலைஞன் - பச்சைப் பொய்களின் மொத்த விற்பனையாளர்களையும் - கலைஞன் என்றே அழைக்கிறோம். ஆனால், அவன் கலைஞன் எனில், இன்றைய பொக்கான நிறுவனங்களுக்கும், போலியான அரசியலுக்கும் எதிராக இயங்கக் கூடியவன் எனில், அல்லது தனது