பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

109 |  வெள்ளியங்காட்டான் 

வாழ்க்கையைப் பற்றிய செய்தியைக் கூடவா நம் இலக்கிய கர்த்தாக்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்? இக்கவிஞனின் வாழ்க்கை பற்றி அறிந்திருந்தால் மனம் இளகி, 'நம் காலத்திலும் இப்படி ஒரு கவிஞனா?' என நினைத்து நெகிழ்ந்து இரண்டு வரி இரங்கல் செய்தியையாவது அவர்களால் அனுப்பியிருக்க முடியும் ஆனால்....?

இன்றும் இப்படி எத்தனையோ ஆனால்கள் விடை காணாத - முடியாத கேள்விக் குறியாகிவிட்ட முடிவற்ற துக்கம்தான், தமிழகத்தின் - தமிழர்களின் சாபக்கேடு போலும். பாரதியைப் போல - புதுமைப்பித்தனைப் போல - இன்னும் முகமறியாத எத்தனையோ கவிஞர்களும் இலக்கியவாதிகளும், சமுதாயத்தாலும் இலக்கிய வாதிகளாலும் கண்டு கொள்ளப்படாமல், கொல்லப்ட்டு விட்ட பின், அவர்களைக் கொண்டாடப் போகிறார்களோ? அன்று பசியிலும் வறுமையிலும் வாடிய வயிற்றுக்கு இன்று 'புகழ்' என்னும் வாய்க்கரிசியை போட்டு, கடன் கழிக்கப்பார்க்கிறார்கள. இந்த தமிழகத்தின் இப்படிபட்ட தலைவிதியை மாற்றியமைக்க எவர் வந்து பிறக்கப் போகிறார்களோ. அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

இன்று வரை அறியப்படாமல் மறக்க - மறைக்கப்பட்ட இலக்கிய கர்த்தாக்களுக்கு என் மனமுருகிய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெ.இரா. நளினி