பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 |  ஒரு கவிஞனின் இதயம்

ஒரு கவிஞனின் இதயம் மாசி முடிய. அதற்குமேல் இங்கு எனக்கு வேலை கிடையாது. இந்த ஊர் எனக்குச் சலித்து விட்டது. அடுத்தபடி எந்த இடத்தில் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ, எந்த இடத்தில் அறியாமை என்ற இருள் நிறைந்திருக்கிறதோ அங்கு செல்ல என் மனம் அவாவுகிறது. ஏற்கனவே 2 அழைப்புகள் வந்துவிட்டன.

என்னைப் போன்ற ஊழியனுக்கு இது போன்ற நல்ல இடங்கள் நிலையாக இருக்க இடம் கொடுக்காது என்பது மட்டும் உண்மை.

நளினி, மனோகரன் அனைவரும் சுகம். நளினியின் படிப்பு அடுப்புடன் முடிந்துவிடுகிறது. எனினும் கதைப்புத்தகங்கள் நிறையப்படிக்கிறாள்.

உன் அன்னையின் எடை எவ்வளவு குறைந்த போதிலும் கவலையில்லை. A.P ஊசி எடைகுறையுமென்று எல்லோரும் சொல்கிறார்கள். உன் செளக்கியத்தை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்.

உன் செளக்கியம் என்றால் அங்கு உன்னைச் சேர்ந்த அனைவரின் செளக்கியமும்தான்.

என் அன்புள்ள மகளே! என் ஒரு தோள்மீது துன்பம் டன்கணக்கில் ஏறும் அதே நிமிடத்தில், இன்னொரு தோள்மீது சந்தோசமும் அதே அளவில் ஏறிக் கொண்டு தானிருக்கிறது. இது விவரிக்க முடியாத ஒரு புதிர். ஆனால், நான் துன்பப்படுகிறேனா? அல்லது சந்தோஷப்படுகிறேனா? ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் எதிர்காலம் நம் அனைவருக்கும் எமாற்றமளிக்காது என்று உறுதியாக நம்புவோமாக. என்ன நேரினும் அதைத் தாங்கும் வன்மை நமக்கு ஏற்படுமாக!

பாரதியார் பாடினார்:- 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் இந்த மகா வாக்கியத்தை நாளும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள். மற்றவை நலம்.

உன் அப்பா N.K. இராமசாமி