பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

59 |  வெள்ளியங்காட்டான் 

போல இருப்பதாக அவனுடைய லெட்டரில் குறித்திருந்தான். நான் அங்கு வந்து என்ன செய்ய இருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் நான் :இங்கிருப்பதுதான் சரி என்றுபடுகிறது. ஆனால் உனக்கும் என்னைப் பார்க்கவேண்டும் போல் தோன்றினால் எழுது. நான் மறுநாளே இங்கிருந்து புறப்பட்டு விடுகிறேன். அப்படி வந்தாலும் உடனே திரும்பி விடுவேன் - என்பது நிச்சயம்.

       குழந்தைக்குத் தொட்டில் துணி சரியாகவே இருக்கிறது. பாபு சரிவரப் பள்ளிக்கூடம் சென்று வருகிறான். வனிதா தினமும் குறும்பு பண்ணி என்னிடம் அடி வாங்குகிறாள். அக்கா அத்தான் எல்லோரும் நலம்.
       நாராயணசாமி கடைக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஏற்கனவே மிகவும் காலம் கடந்து விட்டது. அது இன்னும் கொடுக்கப் படாமலிருந்தால் இனியாகிலும் கொடுத்து விடவும். அவர் சில ரூபாய்களுக்காக நம்மைப்பற்றித் தாழ்வாக நினைக்க இடம்தர வேண்டாம்.
       இறுதியாக நான் உனக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். ஒளிக்கதிரவனை மறைத்த முகில் எப்போதும் மறைத்துக் கொண்டேயிருப்பதில்லை. எப்போதும் மறைக்காமலும் இருப்பதில்லை. அதுபோலவே நமது இன்பமும் துன்பமும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறது.
       நீரை முகிலாக மாற்றிக் கொண்டும் முகில்களை நீராக்கிக் கொண்டும் உள்ளதே வாழ்க்கை. நம் வாழ்க்கையும் இது போன்றதே.

மற்றவை யாவும் நலம்

உன் அப்பா, வெள்ளியங்காட்டான்.


பி.கு. இக்கடிதம் கர்நாடகாவிற்குச் செல்லுமுன் எழுதப்பட்டது. தேதியின் பிழையில் பின் பக்கத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.