பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7  |  வெள்ளியங்காட்டான் 

               7 வெள்ளியங்காட்டான்



                  பதிப்புரை


"நான் என்ன எழுதுவேன் என் கண்ணீரை தவிர! கவிஞர்களையும், மனநோயாளிகளையும் உலகம் வெவ்வேறாகக் கருதுவதில்லை. மனநோயாளிகளைப் போலவே கவிஞர்களும் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்" - தேவி பாரதி ஆம்...! அது முற்றிலும் உண்மையே. அவ்வாறான தனிமையே அவர்களுக்கு உரமாக, ஊக்குவிப்பாக, சிந்தனைக்கு மருந்தாக அமைந்த போதிலும் வறுமைக்கு ஆட்பட்டவர்களாகவும் உதவும் கரங்களை முற்றிலும் இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு என் தந்தையின் கடிதங்களே சான்று. தந்தையின் 'கவிஞன்', 'அறிஞன், 'தமிழன்' 'தாயகம்', 'புரவலன்', 'பரிசு போன்ற காவியங்கள் வறுமையில் அச்சாகி அட்டைக்கு வழியில்லாமல் குப்பைக்குச் சென்றது போக, ஒன்றோ இரண்டோ கைக்கு வந்தும் வாய்க்கு எட்டாமல் போனாலும், மக்களின் செவிக்காவது எட்டியதா என்றால்...? இல்லை. இருந்தும் நான் முயல்கிறேன் மீண்டும் மீண்டும் ஒரு சிறு முயல் போல.