பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஒரு கோட்டுக்கு வெளியே ...



வந்திருந்தாங்க. இவன் என்ன பண்ணுனான் தெரியுமா? சாதி வித்தியாசம் இல்லங்றத காட்டுறதுக்கால எங்க வீட்டுச் சட்டியில போட்ட

காப்பிய ஆபீசருங்க குடிப்பாங்கன்னு சொல்லி ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் ஒவ்வொரு லோட்டாவுல குடுத்துட்டான். அந்த மனுஷங்க குடிக்க மனமில்லாமலும் குடிக்காம இருக்க முடியாமலும் மூஞ்ச சுழிச்சிக்கிட்டு குடிச்சத நெனைக்கையில இப்பக்கூடச் சிரிப்பு வருது. பெரிய மனுஷங்களப் பாத்தா போதும். உடனே அவமானப்படுத்தாட்டி இவனுக்குத் தூக்கம் வராது.”

உலகம்மை விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் ஊக்குவிக்கப்பட்டவன் போல அருணாசலம் அடித்துப் பேசினான்:

“பின்ன என்னம்மா ஒங்க ஜாதிக்காரங்களும் மற்ற தேவர், பிள்ளமார் சாதிக்காரங்களும் பண்றது அசல் ஹிப்போக்ரஸி. அதாவது, உள்ளொன்று வச்சிப் புறமொன்று பேசுறாங்க குளத்துல தண்ணி பெருகிக்கிட்டே போவுது, மதகத் திறங்கன்னு எங்க ஆட்கள் காலுல கையில விழுந்தாச்சு. தண்ணிரை விடாட்டா எங்க சேரிதான் மொதல்ல அழியும். ராம நதில ஒரே வெள்ளம். இவங்க ன்ேனடான்னா பயிர்ப்பச்சைக்குத் தண்ணி வேணுமுன்னு கிராக்கி பண்ணுறாங்க! தண்ணி இருக்குமுன்னு - எஞ்சினியர்கூடச் சொல்லிட்டாரு மதகத் திறக்க மாட்டங்கறாங்க! எங்க சேரியவிட அவங்களுக்குப் பயிர் பச்சதான் முக்கியம். நானும் கலெக்டருக்குப் பல பெட்டிஷன் எழுதிப் போட்டாச்சு.”

அருணாசலம் பெருமூச்சு விடுவதைப் பார்த்துவிட்டு, “அப்புறம் ஒண்ணும் நடக்கலியா?” என்றாள் உலகம்மை.

“நடந்தது! கலெக்டர், ஆர்.டி.ஓவுக்குப் பேப்பர அனுப்புனாரு. ஆர்.டி.ஒ. தாசில்தாருக்கு அனுப்ப, தாசில்தார் ரெவின்யு இன்ஸ்பெக்டருக்கு அனுப்ப, அவரு நம்ம ஊரு முன்ப்ே நாடாருக்கு அனுப்பியிருக்காரு. வேலிக்கு ஓணான் சாட்சிங்கற கதைதான்! நீங்க ஒண்டிக்கு ஒண்டியாய் ஊரையே எதுத்துப் போராடுறீங்க. எங்க ஆள்கள்கிட்ட நாமே போயி மதக உடப்போமுன்னா, இவங்க ஊரில சமபந்தி போஜனம் நடக்கப் போவுதாம். மந்திரி தலைமையில நடக்கப் போவுதாம். சாப்பிடப் போறோமுன்னு சொல்றாங்க. ஊர்க்காரங்க சேரி ஜனங்களுக்கு சாப்பாடு போட்டே அவங்கள சாப்புட்டுட்டாங்க என்கிறது உறைக்கவே மாட்டேங்குறது! இதனாலதான் ஒங்களப் பாக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. எங்க ராமக்கா புருஷன் இங்கதான்