பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஒரு கோட்டுக்கு வெளியே ...



ராமசாமி ஆமான்னுருப்பான். மணவறையில பொண்ண மாறாட்டம் பண்ணிட்டாங்கன்னு மாப்பிள்ள குதிச்சா இவளத்தான் காட்டி னோம்னு சொல்லிடலாம். பொண்ணு செவப்பு சேலன்னு சொன்னி யேன்னு கேட்டா, ஆமா செவப்புக்கரை சேலதான் கட்டியிருந்தான்னு சொல்லிடலாம். மணவறைக்கி வந்த பிறகு மாப்பிள்ள மாற முடியுமா என்ன .'

முட்டுக்குள் தலையை விட்டுக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்த மாரிமுத்து நாடார். சத்தம் கேட்டு நிமிர்ந்தார். உலகம்மை போய்க் கொண்டிருந்தாள். இதற்குள் உள்ளேயிருந்து அவர் மனைவிக்காரி வெளியே வந்து, "ஒலவு, சேலய களஞ்சிட்டு ஒன் சேலய உடுத்துக்கிட்டு போ" என்றாள்.

அப்போதுதான் நினைவு வந்தவளாய், உலகம்மை விடுவிடு வென்று உள்ளே போய், பட்டுச் சேலையை அவிழ்த்து விட்டு, தனது சேலையான அச்சடிச் சேலையைக் கட்டிக்கொண்டாள். அந்தப் பட்டுச் சேலையையே சிறிது வெறித்துப் பார்த்தாள். பிறகு 'அனாவசிய ஆச கூடாது' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல், தலையைப் பலமாகப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டு வெளியே வந்து மாரிமுத்து நாடாரைக் கடக்கப் போனாள்.

"ஒலகம்மா சாப்பிட்டியா?" என்றார் நாடார்.

"ஆமா."

"பொய் சொல்ற. ஏய் கனகு, ஒலகம்மா சாப்புட்டாளா, சோறு போட்டியா?"

"வேண்டாம் மாமா, பசிக்கல."

"சாப்பிட்டுப் போழா. ஒனக்கும் சீக்கிரமா ஒரு வழி பண்ணுறேன்."

உலகம்மை தயங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளேயிருந்து சரோஜா வந்து, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். சாப்பிட்டு முடிக்க, மணி இரவு எட்டு ஆகியிருக்கும். 'அய்யா பசியில துடிச்சிக்கிட்டு இருப்பாரு. பசிய பொறுக்க முடியாதவரு அய்யா. இந்தச் சாப்பாட்டப் பாத்தா ஆசயோட சாப்பிடுவாரு. கேப்பமா? சீ! எனக்கு ஏன் பிச்சக்காரப் புத்தி? கேட்டா குடுப்பாங்கதான், கெடைக்கிங்றதுக்காவ எல்லாத்தையும் கேக்கணுமா, என்ன? 'ேJ நொடியில் சோறு பொங்கலாம்."