பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒரு சத்தியத்தின் அழுகை

அதுவரை சமையலறைக்குள் நின்று கொண்டிருந்த அம்மாக்காரி "நிறுத்துங்க நிறுத்துங்க... எதுக்காக வசந்தாவை அடிக்கிறீங்க?" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

"பிள்ளைங்கள வளக்குற லட்சணமாடி இது. மீனாட்சியைப் பத்தி நல்லாத் தெரியும்; தெரிஞ்சிக்கிட்டும் அவளை இவள் அடிக்கிறாள்னா... அதுக்கு நீ குடுக்கிற செல்லந்தான் காரணம்..." "ஒங்க தங்கச்சிய நீங்கதான் மெச்சிக்கணும். பேனாவை எடுத்தா பல் குத்தறது?"

"சரி. உடச்சிட்டா. அதுக்காக அவள் தலையை உடைக்கணுமா... ரெண்டு திட்டு திட்டிட்டு விடவேண்டியது தானே? என்று கத்தினார் சாமிநாதன்.

மீனாட்சி இப்போதும் தலை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு இப்போது முப்பது வயதிருக்கும். அவளுக்கு மூளைக்கோளாறு என்று சொல்ல முடியாது. ஆனால் பார்ப்பதற்குப் பித்துப் பிடித்தவள் மாதிரி இருப்பாள். ஒரு இடத்தில் உட்கார்ந்தால் முழங்காலில் தலையைப் புதைத்துக்கொண்டு, யோகி மாதிரி மணிக்கணக்கில் இருப்பாள். எவருடனும் பேச மாட்டாள். எப்போதும் ஏகாந்தமான தனிமை; ஆகாயத்தைத் துழாவுவது போன்றோ, அல்லது பூமியைக் குடைவது போன்றோ பார்வை இருக்கும். பெரியவர்களிடம் அனுதாபத்தையும், குழந்தைகளிடம் அழுகையையும் தோற்றுவிக்கும் தோற்றம். அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்குவதற்காக, பூச்சாண்டி என்பதற்குப் பதிலாக மீனாட்சி என்பார்கள். இவ்வளவுக்கும் மீனாட்சி கோபப்பட்டு எவரும் பார்த்ததில்லை. எப்போதாவது, எந்தக் குழந்தையையாவது ஆசையுடன் பார்த்து, "வா” என்று சொல்லிக் கையை நீட்டுவாள். சில சமயம் 'பசிக்கிது என்று அம்மாவிடம் சொல்லுவாள். சத்தம் வருகிற திக்கில் முகத்தைத் திருப்புவாளே தவிர, அலட்டிக்கொள்ள மாட்டாள். கிணற்றில் தண்ணிர் இழுக்கச் சொன்னால், போதும் என்று சொல்வது வரைக்கும் அல்லது கிணற்றுநீர் வற்றுவது வரைக்கும் நீர் பிடித்துக்கொண்டே இருப்பாள். வீட்டைத் துடை என்றால் நிறுத்து, என்று சொல்வது வரைக்கும் தரையே உடைந்தாலும் சரி, துடைத்துக் கொண்டிருப்டாள்.

அன்னையும் தந்தையும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். மூத்த அண்ணன் சாமிநாதன் சென்னையில் செகரட்டேரியட்டில் வேலை பார்த்துக்கொண்டு, அங்கேயே செட்டில் ஆனார். தம்பிமார்களும்