உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் நாள் பொழுது விடிந்தது. அன்று அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் பாபு விழித்துக்கொண் டான். படுக்கையிலிருந்து அவன் எழுந்து பார்த்தபோது தேவகி தூங்கிக்கொண்டிருந்தாள். கட்டிலைவிட்டு இறங்கிய பாபு. முதல்வேலையாக ஜன்னலுக்குச் சென்று கதவைத் திறந்து, அப்பாலிருந்த பன்னீர் மரக்கிளையைப்பார்த்தான் அதிலிருந்த பூக்களை எண்ணினான். இரண்டே இரண்டு பூக்கள் தான் இருந்தன. பாபு மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தான். . மொத்தம் இருந்தது எட்டு. இரண்டு நாளில் இரண்டு பூக்கள் விழுந்ததை நாம் பார்த்தோம். அதற்குப் பிறகு நேற்றுவரை நான்கு நாட்களாக பூ விழுவதை நாம் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த நான்கு நாட்களிலும் நான்கு பூக்கள் விழுந்திருக்கின்றன. மீதி இருப்பது இரண்டே பூக்கள்!' திரும்பவும் கட்டிலில் வந்து படுத்துக் கொண் டான் பாபு. அடுத்த அரை மணி நேரத்தில், அவசர அவசர மாக எழுந்தாள் தேவகி. கண் விழித்தபடியே பாபு கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தாள். அடடே பார்த்தியா அசந்து டேனே...! - என்றாள் ஆதங்கத்துடன். தூங்கிட் "நீ இன்னிக்கு ஒரு நாள் தானேம்மா அசந்து தூங்கினே ...... நான் நாலு நாளா தூங்கியிருக்கேனே....?"- வறட்டுப் புன்னகையுடன் கூறினான் பாபு. "நீ என்னடா சொல்றே......?' "சந்தேகமா இருந்தா போயி பூவை எண்ணிப் பாரும்மா... நாலு பூ விழுந்திருக்கு! அப்போதுதான் அவள் அந்த சன்னல் கதவு திறந்திருப்பதைப் பார்த்தாள்.நாம் எழுவதற்கு முன் அவன் எழுந்து போய் பார்த்திருக்கிறான் என்று அறிந்த தேவகி அசட்டுத்தனமாகத் தூங்கியதற்காக தன்னையே நொந்து கொண்டாள். பூவை எண்ணினாயா பாபு?'- கலவரத்துடன் கேட்டாள் தேவகி! இருப்பேன்! .. ஆமாம்மா... இன்னும் ரெண்டு நாள் தான் நான் “பாபு......!" ஆமாம்மா... அதிலே இன்னும் ரெண்டே ரெண்டு பூதான் மிச்சமிருக்கு!" கடந்த ஓரிரு நாட்களாக சற்று அமைதியடைந் திருந்த தேவகியின் நெஞ்சு மீண்டும் பதற ஆரம்பித்தது. கடந்த ஓரிரு நாட்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த கொஞ்சம் அடங்கிக் கிடந்த கண்ணீரும் விட்டன. மீண்டும் அழுகையு ஆரம்பித் 23