உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் அவன் கூடப் போனா... அதுக்கப்புறம் வரலே... மாதிரி ஆளுகளுக்கு ஒரு வீடு மட்டும் இருக்காதுப்பா பணம் கொடுக்கறவங்க வீடெல்லாம் அவளுக வீடுதான் -!" என்று கூறிவிட்டு, உள்ளே சென்று 'படார்' என்று கதவை மூடிக்கொண்டாள். அந்த அடி தனது முகத்தில் விழுந்த தாகவே நினைத்துக்கொண்ட ரகு,, துவண்டுபோய் கீழே இறங்கினான். ரகுவின் மனவேகம் மேலும் அதிகரித்தது. அங் கிருந்து தேவகியின் பழைய வீட்டுக்கு ஓட்டமும், நடையு மாக வந்தான். அந்த வீடும் பூட்டிக் கிடந்தது. கீழே ராதாவின் போட்டோ ஸ்டுடியோவும் பூட்டிக் கிடந்தது. ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த தனது ஓவியக் கூடத்தையும் பார்க்கிறான் ரகு. பின்பு, அங்கு நிற்க மனமில்லாமல் ராதா வின் வீட்டை நோக்கி ஓடுகிறான். ரவு மணி ஒன்பது! தனது வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் ராதா. எப்படித் தூக்கம் வரும்? மாணிக்கத்திடம் போலி நகைகளை வாங்கியதிலி ருந்து, அவனுக்கும் கீதாவுக்கும் தகராறு. கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டவிடாமல் பண்ணிவிட் டதாக, ராதாவைக் கீதா திட்ட, நீ தானே நகைகளை எடுத்துக் கொண்டாய். நான் பணமாகத் தானே கேட் டேன், உன்னால் தான் காரியம் கெட்டது என்று இவன் அவள் மீது குற்றம்சாட்ட, இருவருக்குமிடையில் தகராறு முண்டு கடந்த ஒருவார காலமாக அவன் தாழ்வாரத்தில் தான் படுத்துக் கொண்டிருக்கிறான். “ஏங்க...!" என்ற கீதாவின் படுக்கையிலிருந்து எழுந்தான் ராதா. "போனால் போவது. குழைந்து கூறினாள், கீதா. + குரல் கேட்டு உள்ளே வாங்க!" அவ்வளவு சொன்னதுதான் தாமதம். எழுத்து உள்ளே ஓடி,படுக்கையறையில் கட்டிலில் விழுந்தான் ராதா. வெளிக்கதவைப் பூட்டிக் கொண்டு கீதாவும் அங்கு வந்தாள். அவள், தலை நிறைய மல்லிகைப்பூவைச் சூடி யிருந்தாள். முகத்தில் பவுடர் போட்டு 'கமகம' என்று வந்து கட்டிலில் அவன் அருகே உட்கார்ந்தாள். "ஏ... அப்பா.... ஒரு வாரமாச்சு!" என்றபடி அவளது கையை எடுத்து விரல்களில் நெட்டி ஓடித்தான் ராதா. "எனக்கே பாவமா இருந்திச்சி அதனால் தான்...!" என்றாள் கீதா, அவனது சேட்டைகளில் லயித்த வளாக! உண்மையில் அவன் மீது இரக்கப் பட்டு அவள் இன்று இடம் தரவில்லை! படுக்கையறையில் அவன் செய்யும் சேட்டைகளும், குறும்புகளும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். 153