உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௦ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 17

"நடிகை நந்திகுமாரி புருஷன துரத்துனதால் நாடே கொதிச்சிநின்னு ஐந்தாண்டு திட்டமே ஸ்தம்பிச்சிப்போச்சுனு எழுதியிருக்கான்"

பேசிய மனிதர் மீண்டும் பேசினார்.

"பாருங்க எவ்வளவு நல்லா எழுதியிருக்கான் என் மவன் அதைவிடுங்க காட்டாம்பட்டி காசின்னு பேரு பதிவாகி நம்ம பட்டிப்பேரு முதல் தடவையா பேப்பர்ல வந்திருக்கு.இதுக்கு பாராட்டு இல்லன்னா ஒரு இழவும் வேண்டாம். எங்க குடும்பத்துப் பங்கை பிரிச்சிடுங்கப்பா"

காடசாமி, மாடசாமியைப் பார்க்க அவர்,கூட்டத்தை நோக்கி குரலை ஏவினார்.

"பெரியய்யா சொல்றது சரிதான். நம்ம ஊருப்பேரு பேப்பர்ல வரும் படியா காசி பண்ணிட்டான். அவனுக்கும் கண்டிப்பா பாராட்டு வைக்கணும்,என்ன சொல்றீங்க? ரெண்டுல ஒண்ணு தெரியணும்"

ரெண்டுல ஒண்ணு தெரிந்தது.

"என்னய்யா இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரமா இருக்கு.என் தம்பிமவன் சாமிக்கண்ணு காவுடையா ஊர்ல போயி கள்ளத் தேங்காய் பிடுங்கும்போது.. ஊர்க்காரங்க மறிச்சிட்டாங்க. எங்க பய அவங்கள நல்லா உதைச்சிட்டு தேங்காயோட திரும்பியிருக்கான். ஊரு விட்டு ஊருபோயி அடிக்கிறது லேசுப்பட்ட காரியமா? அவன் அடிச்சிட்டான்,அதுவும் கள்ளத் தேங்காயோட திரும்பியிருக்கான். காட்டாம் பட்டிக்காரன்னா கை நீட்றவன்னு பேரு வாங்கித் தந்திருக்கான்.இதுக்கு ஒரு இழவும் கிடையாதா? என்னய்யா நியாயம்?"

3.2