பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

O ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

191


திணிக்கப்படும் பறவைகளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய இயலாமைச் சுதந்திரம்... ஆகையால் தாவரங்களின் ஜனநாயகத் திற்காகப் போராடு... போராடப் போராட உன்பலம் உனக்கே தெரியும்... பறவைகளின் கால்களுக்குப் பதிலாக, உன் வேர்களை நம்பு... அப்படி நம்ப, நம்ப, எந்த அக்கிரமப் பறவையும், அனுகூலச் சத்துரு பறவையும் உன்னை அண்ட முடியாது. தோழனே... என்னைப் பார்த்தாவது கற்றுக் கொள்... என் சகோதரா..."

கோணையாக இருந்தாலும், கேணையாகப்போகாத அந்தத் தென்னையின் அறிவுரையை இந்த பாவப்பட்ட மாமரம் ஏற்குமா?

காலம்தான் பதில் சொல்லும்...

 
—தமிழன் எக்ஸ்பிரஸ் - ஏப்ரல் 24- 1996