பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் சுவர் ஓரத்தில் காலால் மிதித்தால் திம்-திம் என்று ஓசை எழுந்தது. அங்கே பூமிக்குள் புதையல் பானை இருக்கிறது என்று அப்பா சொன்னார். அதிலிருந்து, தினசரி அவன் அந்த இடத்திலில் கால் வலிக்கும் வரை மிதித்து மிதித்துப் பார்த்தான். சத்தம் எழுவதைக்கேட்டு சந்தோஷப்பட்டான். "அப்பா, புதையல் எப்போ கிடைக்கும்? அது பெரிய பானையா இருக்குமா? அந்தப் பானைக்குள் என்னென்ன இருக்கும்?' என்று கேட்டுத் தொனதொனத்தான் பையன். "தங்கக் காசுகள், நகைகள் எல்லாம் இருக்கும். பெரிய பானையாகவும் இருக்கலாம். சின்னப் பானையாகவும் இருக்கலாம்" என்று அப்பா பொறுமையாகச் சொல்லுவார். "புதையல் மண்ணுக்குள்ளே எப்படிப் போச்சு?" 'நமக்கு முந்தி எப்பவோ வசித்தவங்க, தங்கம், நகைநட்டுகள் எல்லாவற்றையும் பானைக்குள் போட்டு, பத்திரமாக இருக்கட்டும்னு மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சாங்க. சாகிறபோது அதை யாரிடமும் சொல்லாமலே செத்துப் போயிருப்பாங்க. அப்புறம் எந்தக் காலத்திலாவது அது யாருக்காவது அகப்படும்; அகப்படாமலும் போகும்." வெயிலு அடிக்கடி புதையல் பற்றி விசாரிக்கவும், ஒரு சமயம் அவர் எரிந்து விழுந்தார். "உன்னையாவது உன் அண்ணனை யாவது பலி கொடுத்தால்தான் புதையல் கிடைக்கும்" என்று கோபத்தோடு சொன்னார். அதன் பிறகு அவன் தந்தையிடம் புதையல்பற்றி பேச்செடுக்கவில்லை. புதுவிடு கட்டி பிறவிப்பெருமாள் பிள்ளை ரொம்ப காலம் ஆண்டு அனுவிக்கவில்லை. அவர் லட்சுமி நாராயணர் செம்பை வைத்துத்தான் கும்பிட்டாரே தவிர, வீட்டின் கவர்களில் வேறு சாமி படங்களை மாட்டிவைத்து, பூ மாலை சூட்டி, கும்பிட ஆசைப்படவில்லை. வேறு சில வீடுகளில் சுவர்களில் படங்கள் தொங்குவதை வெயிலு பார்த்தான். "நம்ம வீட்டிலும் ஏனப்பா படங்கள் மாட்டவில்லை?" என்று கேட்டான். "சுவர்கள் வம்பாப் போகும்" என்று அப்பா சொன்னார். அது அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அப்போது அவன் வாய் திறந்து ஒரு 7