உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக்குப் போகலாம். செங்கமலம், உன்னையும்தான் உன்னையும்தான் அழைக்கி றேன் என்றான் கம்பீரமாக! தீயணைப்பதற்காகத் தெருவிலே கூடியிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உதடுகளைப் பிதுக்குவதின் மூலமும், விழிகளை உருட்டுவதின் மூலமும் - தங்கள் விமர்சனங் களை வெளியிட்டுக்கொண்டனர். எப்படித் தன் உயிரை மாய்த்துக்கொள்ள வீட்டைக் கொளுத்துகிற முடிவை ஒரு நொடியில் செங்கமலம் எடுத்தாளோ; அதே மாதிரி மகேஸ்வரனின் அழைப்பை ஏற்று அவன் பின்னால் செல்லுகிற முடிவையும் அதே நொடியில் அவள் எடுத்தாள். மாரி, பொன்னன், மகேஸ்வரன், செங்கமலம், நந்தகுமார் ஐவரும் மகேஸ்வரனின் புதிய வீட்டுக்குள் நுழைந்தனர். "உங்களை மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீடு எரிந்துபோனதைப்பற்றித் தயவுசெய்து கவலைப் படாதீர்கள். நீங்கள் மீண்டும் அங்கே புதிய வீடு கட்டிக் கொள் கிற வரையில் இந்த வீட்டிலேயே இருக்கலாம். யாரும் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாமல், புது வீட்டுக்குக் குடி வந்திருக்கும் எனக்குப் பால் காய்ச்சிக் கொடுத்து, நீங்களும் மனங்குளிரச் சாப்பிடுங்கள். எங்கே, செங்கமலம்! சீக்கிரம் ஆகட்டும். இதோ இருக்கிறது அடுப்பு! அதோ இருக்கிறது பால்! உன் கையாலேயே காய்ச்சிக் கொடு.” மகேஸ்வரனின் வேண்டுகோளை நிறைவேற்றச் செங்கமலம் தயங்கவில்லை. அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு பெரிய பாரம் அழுத்திக்கொண்டிருந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தா மல் அடுப்பை மூட்டி, பால் காய்ச்சத் தொடங்கினாள். - மாரியின் மேனி முழுதும் வியர்வைக் குளம்! அவர் உதடு கள் கடுங்குளிரில் நடுங்குவதுபோல் நடுங்கின! "" “சின்ன எஜமான்! எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்குங்க! ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகுதுங்க! இந்த விஷயமெல்லாம் பெரிய எஜமானுக்குத் தெரிஞ்சா; மாரிப்பயல் எல்லாத்தையும் மறந்துட்டு நன்றி கெட்டுப் போயி நம்ப குடும் பத்தை இப்படி சீரழிச்சுட்டானேன்னு நினைப்பாருங்க!” “நீங்க பயப்படாதிங்க! நான் எதற்கும் தயாராகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். மகேஸ்வரன், பேச்சை முடிப்பதற்குள் நந்தகுமார் குறுக் கிட்டான். “அப்பா! இனிமேல் எதையும் மூடி மறைத்துப் பயனில்லை நான் என் கடமையைச் சரியான நேரத்தில் செய்யத் தவறினால், இந்தக் குடும்பத்துக்குப் பெரிய பழியைக் கொண்டுவந்து சேர்த்தவனாகி விடுவேன்” என்றான். 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/100&oldid=1702507" இலிருந்து மீள்விக்கப்பட்டது