உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 0 கன்னத்தை மெதுவாகத் துடைத்துக்கொண்டு மகேஸ்வரன் புன்முறுவல் பூத்தவாறு நந்தகுமாரைத் தட்டிக்கொடுத்தான். உங்கள் 'சபாஷ்! நந்தகுமார்! இந்த உணர்ச்சியும் எழுச்சியும்தான் உன்னைப் பெற்றெடுத்த சமுதாயத்துக்குத் தேவை! உரிமைக் குரல் என்றைக்கு இவ்வாறு கிளர்ந்து எழுகிறதோ அன்றைக்கே இந்தச் சமுதாயத்துக்கு விடிவு காலம் ஏற்பட்டு விட்டதாக முடிவு கட்டலாம். மகேஸ்வரனின் உருக்கமிகு உரையைக் கேட்டுக்கொண்டு அனைவரும் அசைவற்று நின்றனர். பாய்ந்தோடி வந்த செங்கமலத்தின் விழிகளில் நீர்த்துளி கள் அரும்பு கட்டின. தன் சகோதரி களங்கப்பட்டுவிட்டது மட்டுமல்லாமல் ஏமாற்றப்பட்டும் விட்டாளேயென்ற பதைப்பும் துடிப்பும் கொண்ட நிலையில் நந்தகுமார் மௌனமாக இருந்தான். 'திருமணமா? அது ஒரு கனவு! என்று திட்டவட்டமாகக் கூறியவன், நந்தகுமாரின் தாக்குதலுக்கு ஆளானபிறகு நந்த குமாரின் ஆத்திரத்துக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொடுக் கிறானே; என்ன காரணம்? பொன்னனுக்கு வீரவாடிச் சம்பவம் நினைவுக்கு வந்தது. “நான் ஒரு அரிஜனப் பெண்ணைத்தான் மணப்பேன்” என்று அங்குதானே மகேஸ்வரன் சூளுரைத்துப் பேசினான். மாரிக்கு உலகமே சுழல்வது போன்ற தோற்றம். அவர் கண்கள் இருண் டன. நிம்மதியாகக் கழனி வேலைகளைக் கவனித்துக்கொண்டு, வம்பில்லாமல் வயிறு கழுவிக்கொண்டிருந்த குடும்பத்தில் எப்படி யெல்லாம் சூறாவளி வீசத் தொடங்கிவிட்டது? அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் மனத் துயரைப் பங்கிட்டுக்கொண்டு ஆறுதல் அளித் திட அஞ்சலையும் இல்லாமற் போய்விட்டாளே என்ற வேதனை வேறு இதயத்தில் இடியென முழங்கிற்று மாரிக்கு! 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/102&oldid=1702509" இலிருந்து மீள்விக்கப்பட்டது