உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அம்மா! பாம்புதான் கடிச்சிருக்கு! பயப்படாதிங்க! நான் உங்களைக் காப்பாத்துறேன்” என்று சொல்லிக்கொண்டே, அவ ளது அனுமதி எதுவும் கேட்காமலே அவளது சேலை முந்தானையைக் கிழித்து அவளின் கெண்டைக்காலில் இறுக்கிக் கட்டி இரத்த ஓட்டத்தைத் தடைப்படுத்தினான். அடுத்து, ஒருக்கணம் கூடத் தாமதிக்காமல் தன் சட்டைப் பையிலிருந்த பேனாக் கத்தியை எடுத்து பாம்பின் பல் பட்டிருந்த அவளது பாதத்தில் கீறினான். இரத்தம் குபுகுபுவென வெளிவந்தது. தன் வாயை அந்தக் காயத்தில் வைத்து உறிஞ்சி உறிஞ்சி விஷங்கலந்த அந்த இரத்தத்தைத் துப்பினான். தொடர்ந்து உறிஞ்சி, பாம்பின் விஷம் அவள் இரத்த ஓட்டத்தில் கலந்து காலுக்கு மேல் சென்றுவிடாதபடி பாதுகாத்தான். அதிர்ச்சி யிலும், பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்திலும் காமாட்சி சிறிது மயக்கமுற்றுக் காணப்பட்டாள். அவளை அப்படியே படுக்க வைத்துவிட்டு, கிணற்றடித் தொட்டிக்குச் சென்று அதிலிருந்து ஒரு குவளையில் தண்ணீரைக் கொண்டுவந்து அவள் முகத்தில் தெளித்தான். சிறிது நேரங் கழித்து அவள் விழிகளை லேசாகத் திறந்து பார்த்தாள். “என்னை உள்ளே தூக்கிக்கொண்டு போய்ப் படுக்க வை!” என்று மெதுவான குரலில் பேசினாள். அதுபற்றி இமைப்பொழுது அவன் யோசித்துத் தயங்கி னான் என்றாலும், உடனே அவளைத் தூக்கிக்கொண்டு கொல்லைக் கதவு வழியாக உள்ளே சென்றான். வேலைக்காரி, மேகங்கள் உறுமு போல குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள். காமாட்சியைக் கைகளில் ஏந்தியவாறே, "வேலைக்காரியை எழுப் பட்டுமா?" என்றான் பொன்னன். வது ஊஹூம் வேண்டாம்!" என்று தலையசைத்தாள் காமாட்சி! பொன்ன "உங்க அறை எதும்மா?" என்று கேட்ட னுக்குத் தன் படுக்கையறையைச் சுட்டிக்காட்டினாள். பொன்னன் அவளைத் தூக்கிக்கொண்டு அந்த அறைக்குள்ளே நுழைந்தான். அழகான படுக்கை ஆடம்பரமான அறை. கண்ணனும் ராதை யும் கட்டித் தழுவிக்கொண்டிருக்கும் அற்புதமான தந்தச் சிலை. காமாட்சியைப் படுக்கையில் கிடத்தினான். “குடிக்கக் கொஞ்சம் தண்ணீர்” என்றாள். பொன்னன், சுறறுமுற்றும் பார்த்தான். அந்த அறையி லிருந்த வெள்ளி ஜாடியை அவனுக்குக் காமாட்சி காட்டினாள். அவன், அதிலிருந்து தண்ணீர் மொண்டு அவளுக்குக் கொடுத் தான். அவன் கையாலேயே தன் வாயில் கொடுக்குமாறு காமாட்சி ஜாடை காட்டினாள். “ஆபத்துக்குப் பாபமில்லை!” என்று அவன் மனம் அவனுக்குத் தைரியம் கூறியது. பொன்னன் கையிலிருந்த 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/111&oldid=1702523" இலிருந்து மீள்விக்கப்பட்டது