உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்ற ஆழ்ந்த யோசனையில் பாட்டி ஈடுபட்டாள். ஊமை வேலைக் காரிதான் அந்தக் காரியத்துக்குச் சரியான ஆள் என்று அவளிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை அந்த ஊமை யிடம் கொடுத்து எங்காவது- யார் கண்ணிலாவது படும் இடத் தில் போட்டுவிட்டு வந்துவிடு என்று பாட்டி உத்திரவிட்டாள். நான், குழந்தையுடன் சேர்த்து அந்தச் சுருக்குப் பையையும் கொடுத்து அனுப்பினேன். விடிவதற்கு முன்பே ஊமை வேலைக் காரி வீட்டை விட்டுக் குழந்தையுடன் கிளம்பி நானும் பாட்டியும் சொன்னபடி வெற்றிகரமாகத் திரும்பிவிட்டாள். ஆனால் . வேணி; நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை பெற்ற குழந்தை; மென்று!’ - நான் எனக்கு முன்பாக என் வீட்டுக்கே வந்துவிடு -காமாட்சியின் கதை முழுவதையும் கேட்ட வேணி, அதில் ஒரு எழுத்து விடாமல், தன் கணவன் சோமுவிடம் சொல்லி முடித் தாள். சோமுவும், அந்த விவரத்தைத் தன் நண்பன் மகேஸ்வர னிடம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லிவிட் டான். 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/119&oldid=1702532" இலிருந்து மீள்விக்கப்பட்டது