உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னன் மீது முனியாண்டி மோதினான். தந்தையிடம் அடிபட்டுச் சோர்ந்து கிடந்த பொன்னன், முனியாண்டியை விடவில்லை. அந்தத் தெருவிலே போட்டுப் புரட்டியெடுத்தான். போலீஸ் அதிகாரி தலையிட்டு முனியாண்டியைப் பொன்ன னிடமிருந்து காப்பாற்றினார். அதற்குள் முனியாண்டி, தன் மடியில் இருந்த கத்தியை எடுத்து பொன்னன் நெஞ்சில் குத்திடப் பாய்ந்தான். மகேஸ்வரன் அவனைத் தடுத்துத் துரத்தினான். தார். பண்ணையார், போலீஸ் அதிகாரியைத் தன்னருகே அழைத் 66 அய்யா! எல்லாம் உங்களுக்குத் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன். பொன்னன், திருடனல்ல என்ற பிறகு இனிமேல் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கடமையைச் செய்ததற்கு நன்றி!” போலீசாரும், பதிலுக்கு கிருந்து புறப்பட்டனர். காமாட்சி பொன்னன் செங்கமலம் - - மகேஸ்வரன் நன்றி தெரிவித்துவிட்டு அங் இரு இணைகளின் திருமணத்தைப் பற்றிப் பண்ணையார் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அங்கிருந்த அனைவரும் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சோமுவும் வேணியும் பண்ணையாரிடம் பக்குவமாகப் பேசி னர். நிலைமை இவ்வளவு முற்றி வெடித்துவிட்ட பிறகு இனியும் பிடிவாதம் காட்டுவதில் பயனில்லை. அவர்களின் விருப்பம்போல் திருமணத்தைச் செய்துவைத்து சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கீர்த்தியை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங் கள் என்று சோமுவும் வேணியும் பண்ணையாரிடம் வேண்டினர். நீண்ட நேரம் மௌனமாக நின்றுகொண்டிருந்த பண்ணை யார் பரமேஸ்வரன், இறுதியாக அந்தத் திருமணங்களுக்குத் தன் ஒப்புதலை அளித்தார். ஊர்மக்கள் வியப்புடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். பண்ணையார் அறிவித்தவாறே ஒரு வார காலத்திற்குள் இரு இணைகளுக்குமான மணவிழா ஏற்பாடாயிற்று. பண்ணை யார், வேதனையின் சுமையைத் தாங்க முடியாத நெஞ்சைத் தன் கரங்களால் அழுத்திக்கொண்டே பார்வதியம்மாளிடம் கேட்டார்; “நீ கூடவா பார்வதி இப்படி நடந்துகொண்டாய்?" என்று! அதற்குப் பார்வதியிடமிருந்து பதில் வரவில்லை. அவரது காலில் விழுந்து அவர் பாதங்களில் தலையைப் புதைத்துக்கொண்டு அழுதாள். 6 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/134&oldid=1702554" இலிருந்து மீள்விக்கப்பட்டது