உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து நிக்கும். 'ஏ, 'ஏ, மாரி! கொல்லை மரத்திலே ஏறி கொய் யாப்பழம் பறிச்சுக்கொடு”ன்னு கேக்கும். இப்ப நம்ப கண் ணிலேயே பட்றது இல்லையே!.... உம்! நம்ப என்னா அய்யா வோட வீட்டுக்குள்ளயா நுழைஞ்சிகிட்டிருக்கோம். நம்ப ஜாதியிலேயே செங்கமலத்தைப் பருவமடைஞ்ச பொண்ணுன்னு தெருவிலே தலைகாட்ட விடாம அந்தக் குடிசைக்குள்ளேயே போட்டு அடைச்சு வச்சிருக்கோம். பண்ணைக்காரரு உயர்ந்த ஜாதி. அவுங்க வீட்ல அந்தப் பொண்ணுக்குக் கட்டுக்காவல் அதிகமாத்தானே இருக்கும். ஒருவேளை என் பொண்ணு செங் கமலத்தை பக்கத்து ஊர்ல அவுங்க பாட்டி வீட்டுக்கு அனுப் பிச்சு வச்சது மாதிரி பண்ணைக்காரரு பொண்ணும் அவுங்க பாட்டி வீட்டுக்குப் போனாலும் போயிருக்கும். --இப்படி தன் மனத்துக்குள் நினைவுக் கலப்பை கொண்டு உழுதவாறு அங்கிருந்த ஒரு தாழைப் புதரை நெருங்கினார். மாரி! அவர் கண்கள் அகல விரிந்தன! யாரது? என்ற கேள்வி அவரை அறியாமல் எழுந்தது. கருக்கலின் மங்கலான வெளிச் சத்தில் ஒரு பெண், தாழைப் புதரில் ஒளிந்து ஒளிந்து ஓடிக் கொண்டிருந்தாள். மாரி, நடையில் வேகத்தைச் சேர்த்து அருகே விரைந்தார். முகத்தையும் உடலையும் கறுப்புச் சேலை யால் மூடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மாரியால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரம்மா அது? கேள்விக்குப் பதில் இல்லை. அந்தப் பெண் உருவம் மங்கிய ஒளி யில் எங்கேயோ மறைந்துவிட்டது. மாரி திகைத்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தார். என்னடாது! தேவதைங்கிறாங்களே அதா இருக்குமா? தேவதை இந்தப் பாபி கண்ணிலியா தெரி யும். ஒருவேளை பேய் பிசாசா இருக்குமா? அதுங்க விடியக் காலையிலே வராதும்பாங்களே! நடுஜாமத்திலேதானே வருமாம்! றொரு இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த மாரிக்கு அங்கே மற் அதிர்ச்சி காத்திருந்தது. தாழைப் புதருக்குள்ளிருந்து ஒரு பச்சைச் சிசு வீறிட்டழும் ஒலிதான் அது! பரபரப்புடன் ஓடிய மாரி கண்ட காட்சி என்ன? கனமான துணியொன்றில் கம்பளி போட்டு மூடியவாறு ஒரு குழந்தை! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/16&oldid=1702171" இலிருந்து மீள்விக்கப்பட்டது