உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப் பெண் கொடுக்கப் பல பேர் நான் முந்தி - நீ முந்தி என்று வந்தபோது, பண்ணையார் அந்தப் பெண் வீட்டுக்காரர் களிடம் கேட்ட வரதட்சணை இரண்டு லட்சத்துக்குக் குறைவில்லை. "கசக்குதா என் மகனுக்குப் பெண்ணைக் கொடுக்க? கண் ணுக்கெட்டிய தூரம் வரையில் நிலபுலம்! முப்பது ஸ்டாண் டர்டு ஏக்கரா உச்சவரம்பு வந்தபோதே அஞ்சு பத்தா பிரிச்சு எழுதிவச்சு அமோகமா பூமாதேவி விளைஞ்சுகிட் டிருக்கா! மெட்ராசிலே வக்கில் தொழில்லே பணமா கொட்டுறான் பையன்! மன்மதன் மாதிரி பெத்து வச்சிருக்கேன். ரெண்டு லட்சமென்ன, மூணு லட்சமே கொடுக்கலாம் வரதட்சணை!’ பெண் கொடுக்க வந்தவர்களிடம் பண்ணையார் இவ்வளவு கண்டிப்பாகப் பேசி அவர்களை வழியனுப்பி வைத்துக்கொண்டிருந் தார். இதுதான் மனிதன், தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியாயம்! தன் பெண்ணுக்கு வரதட்சணை கேட்பது கொடுமையாம்! ஆனால் தன் பையனுக்கு அவர் வரதட்சணை கேட்பது உரிமையாம்! - , டூரிங் டாக்கீசில் விளக்குகள் அணைந்தன. படம் ஆரம்ப மாயிற்று. அஞ்சலையும் செங்கமலமும் நிமிர்ந்து உட்கார்ந்து படத்தை ரசிக்கத் தொடங்கினர். コ வீட் ஒரு அழகான பெண்! அவள் திருமணமாகாமலே டிலே இருக்கிறாள். இரண்டு மூன்று தடவை திருமண ஏற் பாடுகள் நடைபெற்று எதிர்பாராத திடீர் நிகழ்ச்சிகளால் திருமணம் நின்று போகிறது. வாழ்க்கையில் வெறுப்புற்ற அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள ஒரு பாழுங் கிணற்றில் குதிக்கிறாள். அதைத் தொலைவிலிருந்து பார்த்து விட்ட ஒரு வாலிபன் கிணற்றில் பாய்கிறான். இருவரும் கட்டிப் பிடித்தவாறு வெளியே வருகிறார்கள். ஒருவரையொருவர் விக்கொண்டு கிணற்றங்கரையிலேயே புரளுகிறார்கள். இன்பகீதம் இசைக்கிறார்கள். தழு படத்தின் கதை இப்படிச் கதை இப்படிச் சென்றுகொண்டிருந்தது. அஞ் சலை வெடுக்கென செங்கமலத்தின் கையைப் பிடித்து இழுத்து வாம்மா வீட்டுக்குப் போகலாம் என்று எழுந்தாள். ‘“ஏம்மா!” என்றாள் திகைப்புடன் செங்கமலம்! படமா இது? தூ!” என்று முணுமுணுத்துக்கொண்டே அஞ்சலை, செங்கமலத்தை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். வீட்டுக்கு இது நடந்து ஓராண்டுக்கு மேலே ஆகிறது! பிள்ளைகளை யும் பெண்ணையும் கண்ணியமாகவும் கட்டுப்பாடாகவும் வளர்ப் பதில் அஞ்சலைக்கு அவ்வளவு அக்கறை! அதே அளாவுக்கு அந்தக் குடும்பத்தில் பாசத்தின் திருஉருவமாகவும் அஞ்சலை திகழ்ந் தாள். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/25&oldid=1702180" இலிருந்து மீள்விக்கப்பட்டது