உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகங்களிலே பதவி வாங்கிக்கிட்ட சில சுயநலவாதிகளாலே நம்ப சமூகம் முன்னேறவே முடியாது! நம்ப எல்லாரும் சேர்ந்துதான் புரட்சி பண்ணணும்.” " " 'அப்படி வா வழிக்கு! அதைத்தான் நான் சொல்றேன். உன்னை அடிச்ச அந்த ஆள் யாரு? இப்பவே சொல்லு! புரட்சியைப் பண்ணிக்காட்டுறோம். தனக்குக் கிடைத்த சந்தில் நுழைந்துகொண்டு முரட்டு மனி தன் கோபம் கொப்பளிக்க முண்டாவைத் தட்டினான். 'நான் சொல்ற புரட்சி அடிதடிப் புரட்சியல்ல. அடிப்படைப் புரட்சி! முதல்ல நம்ப வீட்டுப் பிள்ளைகளுக்கு அறிவுக் கண்ணைத் திறக்கணும். எல்லாரும் ஓர் குலம் அப்படின்னு பாடுற பாட்டைக் கேட்டு தலையை அசைச்சுகிட்டு இருந்தா போதாது. நமக்குள் ளேயே அந்த எண்ணம் வரணும். நமக்கு இருக்கிற தாழ்வு மனப் பான்மை போகணும். பண்ணைக்காரர் மகன் மகேஸ்வரன் வக் கீலா இருக்காரு! அதோட சீர்திருத்தவாதியாவும் இருக்காரு! அந்த வண்டிக்காரர் என்னை அடிச்சப்போ, துடிதுடிச்சு ஓடி வந்து என்னைத் தூக்கிக் காரிலே போட்டுகிட்டு டாக்டருகிட்டே ஓடி, கட்டுக் கட்டி சிகிச்சையெல்லாம் செய்து, அதுக்கப்புறம் அவர் காரிலேயே இங்கே கொண்டாந்து விடுறாரு! அது பாபமாம் எங்கப்பா போயி, அவர் காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்கிறாரு! இப்படியொரு தாழ்வு மனப்பான்மை நமக்கிட்டே இருந்தா நம்ப எங்கே உருப்படுறது? - மகா மாரி, மகிழ்ச்சியும் கோபமும் கலந்த குரலில் மகனைப் பார்த்து “டேடே தம்பீ! நிறுத்துடா உன் பிரசங்கத்தை! கொஞ்சம் உடம்பு நல்லாகட்டும். அப்பறம் ஒரு நாளைக்கு தெருவிலேயே மேடை போட்டு பெட்ரோமாக்ஸ் லைட் வச்சு தர்ரேன். நீ உன் பிரசங்கத்தை நடத்தலாம்" என்றார். நம்ப “லைட் மாத்திரம் போதாதுப்பா! லவுட் ஸ்பீக்கர் கூட வச்சுத் தரணும். கூட்டத்தை நம்ப தெருவிலே மட்டும் போட்டுப் பிரயோஜனமில்லை. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஆண்டவன் பேராலும், மதங்கள், புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் பேராலும் நசுக்கப்பட்டுக் கிடக்கிற நம்ப மக்கள் இருக்கிற எல்லா இடங்களிலேயும் கூட்டம் போடணும். அம்பல் கிராமத் திலே மட்டுமல்ல; பக்கத்திலே இருக்கிற திருமாகாளம், பொறக் குடி, கிடாமங்கலம், கணபதிபுரம் எல்லா ஊர்லேயும் முதல் கட்டமா கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்க! உங்களுக்கெல்லாம் பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலே இருக்கிற கூத்தனூர் கிராமம் தெரியுமில்லே! நம்ப தமிழ்நாட்டிலேயே சரஸ்வதிக்குன்னு ஒரே ஒரு கோயில் இருக்கிற ஊர் அது ஒண்ணுதான்னு எல்லாரும் சொல்ராங்க! இப்படி சரஸ்வதிக்குக் கோயில் கட்டி வச்சிருக்கிற பெருமைதான் மிச்சமே தவிர நூற்றுக்கு நூறு பேர் நம்ப தற் குறியா இருக்கிறோமே; இது சரியான்னு சிந்திச்சுப் பாருங்கன்னு அந்தக் கூட்டத்திலே எடுத்துச் சொல்லணுமா வேண்டாமா?" 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/30&oldid=1702185" இலிருந்து மீள்விக்கப்பட்டது