உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கமலத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்த அவனு டைய சிந்தனை சற்றுக் கலைந்து, வீரவாடி கிராமத்தைப் பற்றி ஊரார் சொன்ன கர்ணபரம்பரைக் கதைகள் அவன் நினைவுக்கு வந்தன. மன்னர்கள் காலத்தில் "நோக்கர்' என்னும் குலத்தின ருக்கு இனாமாக வழங்கப்பட்ட கிராமத்திற்குப் பெயர்தான் வீரவாடி! அந்தச் சிற்றூருக்கு அந்தப் பெயரைச் சூட்டியவரே பழைய காலத்து மன்னர் ஒருவர்தானாம்! நோக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள், முதுகில் முறங்களைக் கட்டிக்கொண்டு பறக்கும் கலையைக் கற்று அதனை மிகத் திறமை யாக வெளிக்காட்டி வந்தார்களாம். அவர்கள் ஒருநாள் மன்னரை அணுகித் தங்கள் திறனைக் காட்ட வாய்ப்பு வழங்குமாறு கோரி னார்களாம். அதை நம்ப முடியாத மன்னர் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் முறத்தைக் கட்டிக்கொண்டு பறந்து சென்று எந்த ஊரில் இறங்குகிறீர்களோ; அந்த ஊரையே உங்கள் னத்த வர்க்கு இனாமாக அளிக்கத் தயார்” என்றாராம். 6 6 அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டு நோக்கர் குலத்தினர் முறங்களைக் கட்டிக்கொண்டு பறந்து வந்து ஒரு ஊரில் இறங்கி னார்களாம். மகிழ்ச்சியடைந்த மன்னர் அந்த ஊரையே அவர் கட்கு மானியமாக வழங்கி, அந்த ஊருக்கும் “வீரவாடி” என்ற பெயரைச் சூட்டினாராம். இந்தக் கதை உண்மையாக இருக்குமா? அல்லது யாரோ கட்டிவிட்ட கற்பனையா? என்று மனத்துக்குள் கேள்விகளை எழுப் பியவாறே காரைச் செலுத்தி வந்த மகேஸ்வரனின் கண் எதிரே ஒரு கலகக் கூட்டம்! ஒரு கூட்டத்தார் கையில் நீண்ட கம்புகளும் முறங்களும் இருக்கின்றன. ஆம்; சந்தேகமில்லை- அவர்கள் வீரவாடியைச் சேர்ந்தவர்கள் தான். எதிரிகளைத் தாக்க கம்பும், எதிரியின் தாக்குதலைச் சமா ளிக்கக் கேடயம்போல முறமும் கைகளில்! அந்தக் இன்னொரு கூட்டத்தின் கைகளில் அரிவாள், மண்வெட்டி, கம்புகள்! அந்தக் கூட்டத்தார் அம்பல் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பது மகேஸ்வரனுக்கு உடனே விளங்கிவிட்டது. கூட்டத்துக்குப் பொன்னன்தான் தலைமை தாங்கி நடத்திக்கொண் டிருந்தான். அவனருகே திருக்கைவால் முரடன் முனியாண்டியும் திருக்கைவாலைச் சுழற்றி எதிரிகளை அடித்துக் கொண்டிருந்தான். ஒரே கூக்குரல்! அடி! குத்து! கொல்லு! இப்படி வீராவேச ஒலிகள்! இந்தப் பகுதியிலேதான் நந்தகுமார் தாக்கப்பட்டான் என்ப தும், அதற்குப் பதிலுக்குப் பதில் தாக்குவதற்காகவே அம்பல் 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/39&oldid=1702200" இலிருந்து மீள்விக்கப்பட்டது