உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்து தடவிக்கொண்டு வருவதாக ஒரு பொய்யைச் சொல்லி விட்டு அங்கிருந்து போய்விட்டான் அவன், நந்தகுமார் ஏன் போய்விட்டான் என்று மகேஸ்வரனுக்குத் தெரியும். இருந்தாலும் செங்கமலம், அந்தக் குடிசைக்கு வந்து பால் காய்ச்சித் தரப்போகிற நிகழ்ச்சியை எண்ணி அவள் வரவு பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பு தான் அவளைப் பிரிந்து வந்தான் என்றாலும், தனது புதிய புரட்சி வீட்டுக்குத் தன்னுடைய எதிர்கால மனைவி வரப்போகிறாள் என் பது இனிமை மிக்க ஒன்றல்லவா? ய பொன்னன், செங்கமலத்தை அழைத்து வர, தன் தெரு வுக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரும் தீ ஜுவாலையைக் கண்டான். ஆம்! மாரியின் வீடு எரிந்து கொண்டிருந்தது. தெருவில் ஒரே கூக்குரல். நெருப்பு, தங்கள் வீடுகளுக்குப் பரவாமல் இருக்க மற்ற வீட்டுக்காரர்கள் தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு மாரியின் வீட்டுத் தீயையும் அணைப்பதில் ஈடுபட்டனர். பொன் னன், தீயை அணைத்திட முடியாமல் தவித்துக்கொண்டே, “செங் கமலம்! தங்கச்சீ! தங்கச்சீ! செங்கமலம்!” என்று அலறினான். செங்கமலத்தின் குரல் பதிலுக்குக் கேட்கவில்லை. தன்னுயிரைப் பொருட்படுத்தாமல், எரியும் வீட்டுக்குள் பொன்னன் நுழைந் தான். 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/96&oldid=1702503" இலிருந்து மீள்விக்கப்பட்டது