பக்கம்:ஒரே உரிமை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரியவாதி

117

ணும், பார்க்கணும்னு அது அடிச்சிக்கிட்டு இருந்தது, தெரியுமா? எங்கே, வேலை ஓஞ்சாத்தானே! அதில்லாம எத்தனையோ தொல்லை, தொந்தரவுங்க! வீட்டுக் கூரை பொத்தலாப் போச்சு வரப்போறது மழைக் காலம், அதைப் பிரிச்சுக் கட்டறதுன்னா இப்போ ஐம்பது ரூபா யாச்சும் வேணும். உழவுமாடு ரெண்டும் திடீர்னு 'சீக்கு' வந்து செத்துப் போச்சு; திரும்ப வாங்குகிறதுன்னா இருநூறு ரூபாயாச்சும் ஆவும். ஆடித் தூறல் தூறுது, நாலு கலம் விதை நெல்லு வாங்கி விதைக்கலாம்னா கையிலே காசில்லே!—உம், அப்படியெல்லாம் இருக்குது, என் கஷ்டம்! இங்கே வந்து உன்னுடைய கஷ்டத்தையும் பார்த்து ஏன் இன்னும் கஷ்டப்படணும்னுதான் நான் இத்தனை நாளா இங்கே வரலே, தங்கச்சி!" என்று ஒரே 'கஷ்ட' மாகச் சொல்லிக் கொண்டே போனான் அவன்.

"ஊம்" என்று விஷமத்தனத்துடன் புன்னகை புரிந்தாள் பொன்னி.

அடுத்தாற்போல் அந்த 'நாலு பேர்' இருக்கிறார்களே, நன்மைக்கும் தீமைக்கும்—அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு விட்டான் அண்ணன்!

"அம்மா! எத்தனை கஷ்டங்கள் எனக்கு இருந்தாலும் இனிமே உன்னுடைய கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு என்னாலே ஒரு நிமிசம்கூடச் சும்மா இருக்க முடியாது. 'நாலு பேரு' சொல்றது என் காதிலே நாராசமா விழறது......!"

"ஐயோ! அப்படி என்ன அபாண்டம் சொன்னாங்க, அண்ணாச்சி?"

"வேறே என்ன சொல்லுவாங்க, தங்கச்சி! 'என்ன இருந்தாலும் ஒரு அறியாத பொண்ணு: சின்னஞ் சிறிசு; அறுத்துப் போட்டவ; ஊரிலே இருக்கிற தடியன்களுக்கு மத்தியிலே ஒண்டியாயிருக்கலாமா?"ன்னு அவங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/119&oldid=1149886" இலிருந்து மீள்விக்கப்பட்டது