பக்கம்:ஒரே உரிமை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நடக்காத கதை


"நான்தான், காத்தாயி!" என்று கண்களில் நீர் மல்கச் சொன்னான் கண்ணுச்சாமி.

"என்ன, இந்த நேரத்திலேயே வந்துட்டே? பொழுது விடிந்தில்லே வருவேன்னு பார்த்தேன்?"

"நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டுப் போனேன், காத்தாயி! அந்தப் பாழும் தெய்வம்..."

"என்ன, என்ன!—ஏன்? என்ன தடந்தது?" என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே, கட்டிச் சுருட்டிக் கொண்டு எழுந்து தன் கணவனுடைய தோள்களைப் பற்றினாள் காத்தாயி.

கண்ணுச்சாமி நடந்ததைச் சொன்னான்.

"இதற்கா இப்படி அழறே? 'அந்தத் தர்ம ராஜா தலையிலே இடி விழ!' என்று நினைச்சுக்கிட்டுப் பேசாம இருக்காம!" என்று சொல்லிக் காத்தாயி அவனைத் தேற்றினாள்.

***

பொழுது விடிந்தது. "தன்னுடைய கஷ்டம் விடிந்ததா?" என்று எண்ணிக் கொண்டே படுக்கையை விட்டு எழுத்தான் கண்ணுச்சாமி. காலைக் கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, கவலையுடன் அல்லாப் பிச்சை ராவுத்தரின் கடையை நெருங்கினான்.

நடுங்கிக் கொண்டே ஒரு புறமாக ஒதுங்கி நின்ற அவனை நோக்கி, "என்னா பிள்ளை! ஏன் அங்கிட்டு நிக்கறே? —சும்மா இங்கிட்டு வா!" என்றார் அல்லாப்பிச்சை ராவுத்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/126&oldid=1149431" இலிருந்து மீள்விக்கப்பட்டது